வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காங்கரெஸ்ஸும் ஊழலும் பிண்ணிப்பிணைந்தது
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார்.கர்நாடக அமைச்சரவையில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. பல்லாரி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார்.பழங்குடியினர் நலத் துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு பற்றி, கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த ஆண்டு மே மாதம் சந்திரசேகர் என்ற அதிகாரி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கைதாக வாய்ப்பு
இந்த விவகாரத்தில் நாகேந்திரா, தன் அமைச்சர் பதவியை இழந்தார். ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை, சட்டவிரோதமாக பயன்படுத்தியது தெரிந்ததால் அமலாக்கத்துறை விசாரித்து, நாகேந்திராவை கைது செய்தது. மூன்று மாதங்கள் சிறையில் இருந்த அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆணையத்தில் நடந்த முறைகேட்டில் நாகேந்திரா தான் முக்கிய நபர் என்றும், ஆணையத்திற்கு ஒதுக்கிய 187 கோடி ரூபாயில் 89 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், 20 கோடி ரூபாயை பல்லாரி லோக்சபா தேர்தலுக்கு செலவு செய்தததாகவும் கூறப்பட்டு இருந்தது.நாகேந்திரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அமலாக்கத்துறை அனுமதி கேட்டு இருந்தது. இதற்கு கவர்னர் நேற்று அனுமதி வழங்கினார்.இதனால் நாகேந்திரா மீது வழக்குப்பதிய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அவர் மீண்டும் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அமைச்சர் பதவி
சிறையில் இருந்து வெளியே வந்தபோது, 'வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அமலாக்கத்துறை என்னிடம் விசாரித்தபோது, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பெயர்களை சொல்ல சொல்லி என்னை துன்புறுத்தினர்' என, நாகேந்திரா கூறி இருந்தார். மீண்டும் அமைச்சர் பதவியை பெற முயன்றார்.சமீபத்தில் டில்லி சென்ற முதல்வர் நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென, ராகுலிடம் கேட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் நாகேந்திராவிடம் விசாரணை நடத்த கவர்னர் அனுமதி வழங்கி இருப்பதால், நாகேந்திராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மற்றொரு பக்கம் நாகேந்திராவுக்கு நேற்று இரண்டாவது 'ஷாக்' கொடுக்கப்பட்டது. அதாவது நாகேந்திராவுக்கும், பல்லாரியின் வி.எஸ்.எல்., இரும்பு தொழிற்சாலைக்கும் இடையே வணிக பரிவர்த்தனையில் பிரச்னை இருந்தது.இதுதொடர்பாக 2013ல் தீர்ப்பு கூறிய நீதிமன்றம் வி.எஸ்.எல்., தொழிற்சாலைக்கு 2.53 கோடி ரூபாய் வழங்க நாகேந்திராவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு அவர் காசோலை வழங்கினார்.அந்த காசோலை திரும்ப வந்தது. இதையடுத்து நாகேந்திரா மீது தொழிற்சாலை உரிமையாளர் அனில் ராஜசேகர், பெங்களூரு 42வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதி சிவகுமார் விசாரித்தார். வழக்கு மீதான விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி நாகேந்திராவுக்கு 1.25 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை என்றும் தீர்ப்பு கூறினார்.
காங்கரெஸ்ஸும் ஊழலும் பிண்ணிப்பிணைந்தது