உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ப்பு நாய் உயிரிழப்பு  கீதா சிவராஜ்குமார் உருக்கம்

வளர்ப்பு நாய் உயிரிழப்பு  கீதா சிவராஜ்குமார் உருக்கம்

பெங்களூரு: வளர்ப்பு நாய் உயிரிழந்ததால், நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார்.கன்னட திரை உலகில் முன்னணி நடிகர் சிவராஜ்குமார், 62. சிறுநீரக புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர், அறுவை சிகிச்சை செய்து உள்ளார். அங்கு மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளார்.இந்நிலையில் சிவராஜ்குமார் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த, நீமோ என்ற நாய் உயிரிழந்து உள்ளது.இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் சிவராஜ்குமார் மனைவி கீதா பதிவு:எங்கள் வீட்டில் நாங்கள் ஆறு பேர். சிவண்ணா, கீதா, நிஷு, நிவி, திலீப், நீமோ. திலீப் தான் நீமோவை எங்கள் வாழ்வில் கொண்டு வந்தார். எல்லோரும் அவர்களின் செல்ல பிராணிகள் பின்பு ஓடுவர். ஆனால் நீமோ மட்டும், எங்கள் பின்பு இருப்பான்.நீமோ என் வாழ்க்கையின் ஒரு பகுதி. நாங்கள் இருவரும் ஒன்று. அவனை ஒரு குழந்தை போல, நிவி கவனித்து கொண்டார்.இப்போது எங்கள் குழந்தை, அனைவரையும் விட்டு கடவுளிடம் சென்றது. கடந்த ஒரு மாதமாக சிவண்ணாவுடன் தான் நீமோ துாங்கினான். இதற்கு முன்பு அவன் அப்படி செய்தது இல்லை. எங்கள் குடும்பத்தின் அங்கமாக இருந்தான். அவன் எங்களை விட்டு பிரிந்து விட்டான் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டேன். செல்ல பிராணிகள் நம்மிடம் இருந்து பிரியும் போது, நமது வலிகளை எடுத்து செல்கின்றன.லவ் யு நீமோ.இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை