உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிஷனரி பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்தில் வரி விலக்கு கோரிய மனு தள்ளுபடி

மிஷனரி பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்தில் வரி விலக்கு கோரிய மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அரசு உதவி பெறும் கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் இருந்து டி.டி.எஸ்., வரிப்பிடித்தம் செய்வதில் தவறொன்றும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'சமூகத்துக்கு பல்வேறு தொண்டுகள் செய்து வரும் மிஷனரிகள் வழங்கும் சேவைகளுக்காக, அவர்கள் பெறும் கட்டணத்தில் வரி பிடித்தம் செய்யக்கூடாது' என, மத்திய நேரடி வரி வாரியம் 1944ல் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

மேல்முறையீடு

இதை தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்படாமல் இருந்தது.இந்நிலையில், இந்த நடைமுறைக்கு 2014ல் வருமான வரித்துறை முற்றுப்புள்ளி வைத்தது. அதன்படி, அனைத்து மதம் சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து டி.டி.எஸ்., வரி பிடித்தம் செய்யும்படி மாநில கல்வித் துறைக்கு உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து முன்கூட்டியே டி.டி.எஸ்., வரி பிடித்தம் செய்து கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மறைமாவட்டங்கள் மற்றும் திருச்சபைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு செய்தன. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், எஸ்.முரளீதர் வாதிட்டதாவது:ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்களுக்கு அரசு வழங்கும் சம்பளம், பள்ளியை நடத்தும் திருச்சபைக்கு சொந்தமானது. அந்த பணம் ஆசிரியர்களை சென்று சேராது.கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் விபத்தில் மரணம் அடைந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு அவர்களின் உறவினர்களுக்கு சென்று சேராது. திருச்சபைக்கே சேரும். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி துறவு வாழ்க்கைக்குள் நுழைவதாக உறுதி ஏற்றவுடனேயே, குடும்ப பந்தங்கள் அறுபட்டு விடுகின்றன. எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்யக்கூடாது.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

தள்ளுபடி

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் வறுமையில் வாழ்வதாக உறுதிமொழி ஏற்றிருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அரசு மானியத்தில் இருந்து வழங்கப்படுகிறது. வருமானம் என்று ஒன்று இருந்தால் வரி என்பது இருக்க வேண்டும். எனவே, வரி பிடித்தத்தில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தமிழ்வேள்
நவ 10, 2024 19:10

வறுமையில் வாழ உறுதி எடுத்துக் கொண்டவர்களுக்கு எதற்கு மாதசம்பளம்? அதை ஏன் திருட்டு சபைக்கு தரவேண்டும்? மூன்று வேளை சோற்றை திருச்சபை போடாதா? சம்பளத்தை பிடுங்கும் திருச்சபைக்கு அதுகள் புடுங்கிய தொகையைப் போல நூறு மடங்கு அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும்.


saravanan
நவ 10, 2024 12:58

மக்கள் செலுத்தும் வரிப்பணம் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக செலவிடப்படுகிறது என தெரிந்தும் மக்களுக்காக தேவ ஊழியம் செய்பவர்கள் ஏன் வரி கொடா இயக்கம் நடத்த வேண்டும்? காரணம் வரி செலுத்துவதால் எந்த விதமான மத மாற்றங்களையும் நிகழ்த்த முடியாது. இவர்களின் உண்மையான சேவைகளை புரிந்து கொள்ள நாம் தான் தவறுகிறோம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்க பட வேண்டிய ஒன்று


Enrum anbudan
நவ 10, 2024 12:29

அரசு உதவி பெரும் கிருத்துவ பள்ளிகளில் வேலைக்கு சேர நினைக்கும் இந்து பெண் மற்றும் ஆண்களை அப்ளை செய்யும்போதே அங்கு உள்ள கிருத்துவ ஆசிரியைகள் நாங்கள் எல்லாம் மாலை வேளைகளில் பிரார்த்தனை செல்லும்பொழுது நீங்கள் மட்டும் சும்மா இருக்க வேண்டும் அதனால் வேறு பள்ளியில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள் என்று சொல்கின்றார்கள். இங்கு கிருத்துவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறுகின்றார்கள். இது நடந்தது உண்மையில் சென்னை முகப்பேரில் ஒரு பள்ளியில்.


தமிழ்வேள்
நவ 10, 2024 10:43

அங்கிளுக்கு எதற்கு சம்பளம்.வருடத்துக்கு மூன்று செட் வேட்டி சட்டை சேலை அங்கி & மூன்று வேளை தயிர் சோறு காலையில் கட்டாயம் எட்டிக்காய் சூரணம் தந்தால் போதும்... அப்புறம் அல்லேலூயா தொழிலுக்கு எவனும் வரமாட்டான்.நாடு நிம்மதியாக இருக்கும்..


krishnamurthy
நவ 10, 2024 09:57

சலுஹை றது மட்டுமல்ல முந்தைய காலா வரியும் திருச்சபைகளில் இருந்து பிடிக்கப்பட்ட வேண்டும்


rama adhavan
நவ 10, 2024 08:35

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியே. 1944 ஆணை இந்திய சுதந்திரத்திற்கு முன் பிறப்பிக்கப்பட்டது. 1961இல் புதிய வருமானவரி சட்டம் வந்து விட்டது. அதில் விலக்கு இல்லை எனில் வரி கட்டிதான் ஆகவேண்டும். விலக்கு, மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது. முறைப்படி திருசபைகள் 1947இல் இருந்து 2014 வரை வரி கட்ட வேண்டும். இது பற்றி வருமான வரி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பார்கள் என நம்புகிறேன்.


Svs Yaadum oore
நவ 10, 2024 08:21

சமூக நீதி சமூக நீதி நாங்கள்தான் தமிழனை படிக்க வைத்தோம் இட ஒதுக்கீடு என்று கூவும் மத சார்பின்மை திராவிடனுங்க ....அப்ப இந்த மதம் மாற்றிகள் நடத்தும் பள்ளி கல்லூரிகளிலும் சமூக நீதி இட ஒதுக்கீட்டை அமல் படுத்தட்டும் ...


Svs Yaadum oore
நவ 10, 2024 08:17

இந்த பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி புரியும் ஹிந்துக்களுக்கு மதம் மாற சொல்லி மறைமுகமாக எச்சரிப்பது ....இல்லையென்றால் வேலையே விட்டு விலக சொல்லி கட்டாயப்படுத்துவது .....இந்த பள்ளி கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் ஆராய்ச்சி மாணவர்களையும் மதம் மாற்றம் செய்வது ....இதுதான் இவனுங்க செய்யும் தொண்டு ..இவனுங்கதான் தமிழனை படிக்கச் வைத்தார்கள்...இந்த வரி இல்லா சலுகை இந்த மதம் மாற்றிகளுக்குத்தான் ....ஹிந்துக்கள் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் வரி உண்டு ....இதுதான் விடியல் திராவிடனுங்க கூறும் சமூக நீதி மத சார்பின்மை ...


ஆரூர் ரங்
நவ 10, 2024 07:46

பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் அதற்கு வரிப் பிடித்தம் கிடையாது. ஒழுங்காக வரிகட்டி தேச பக்தியை வளருங்கள். பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது.


சுலைமான்
நவ 10, 2024 07:41

இதற்கு பதிலாக மிஷநரி கல்வி சாலைகளை அரசு கையகப்படுத்தி அரசு கல்வி சாலைகளாக அறிவிக்கலாமே? கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரிகளின் நோக்கம் சேவை மட்டும் தானே? அதை அரசு கல்வி சாலைகளிலும் அரசு நிறுவனங்களிலும் செய்யட்டுமே!


சமீபத்திய செய்தி