உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்ளை முயற்சியில் பெட்ரோல் பங்க் மேலாளருக்கு துப்பாக்கிச்சூடு

கொள்ளை முயற்சியில் பெட்ரோல் பங்க் மேலாளருக்கு துப்பாக்கிச்சூடு

கோகுல்புரி: துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கொள்ளையடிக்க முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.வடகிழக்கு டில்லியின் கோகுல்புரி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு மேலாளராக ரவீந்தர் பால் சிங், 48, பணியாற்றி வருகிறார்.திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் முந்தைய நாள் பெட்ரோல் பங்க் வருவாயை வங்கியில் செலுத்துவதற்காக தன்னுடன் பணிபுரியும் ஒருவருடன் சேர்ந்து ரவீந்தர் பால் சிங் அருகில் உள்ள வங்கிக்கு சென்று கொண்டிருந்தார்.மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேர் ரவீந்தரை வழிமறித்து, அவரிடம் இருந்த பணப்பையை துப்பாக்கி முனையில் பறிக்க முயன்றனர். அவர்களுடன் ரவீந்தர் போராடினார். இதனால் ரவீந்தரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டான்.இதில் அவருக்கு இடது கையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதற்குள் அந்த பகுதியில் கூட்டம் கூடவே கொள்ளை கும்பல் தப்பியது.தகவலறிந்து வந்த போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துவக்கினர்.கொள்ளை முயற்சி தொடர்பாக சதேந்தர் என்கிற பாபா, 45, ராகுல் காஷ்யப், 39, ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் மீது மகாராஷ்டிராவில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ