உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்தை இயக்க மறுத்த பைலட்: 45 நிமிடம் காத்திருந்த துணை முதல்வர்

விமானத்தை இயக்க மறுத்த பைலட்: 45 நிமிடம் காத்திருந்த துணை முதல்வர்

மும்பை: மஹாராஷ்டிராவின் ஜால்கனில் இருந்து மும்பைக்கு, அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செல்ல முயன்றபோது, பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க முடியாது என பைலட் தெரிவித்ததால், 45 நிமிடங்கள் வரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார். இவர், மும்பையில் இருந்து மஹாராஷ்டிராவின் ஜால்கனுக்கு நேற்று முன்தினம் மாலை 3:45 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. ஜால்கனில் நடந்த நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவருடன் அமைச்சர்கள் கிரிஷ் மஹாஜன், குலாப்ராவ் பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் மீண்டும் மும்பை செல்ல, ஜால்கன் விமான நிலையத்திற்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரவு 9:15 மணிக்கு வந்தார்.அப்போது அவர் செல்ல இருந்த விமானத்தின் பைலட், விமானத்தை இயக்க மறுத்தார். தன் பணி நேரம் முடிந்துவிட்டதாகவும், மீண்டும் விமானத்தை இயக்க, உயரதிகாரிகளின் அனுமதி தேவை என்றும் அவர் தெரிவித்தார். இதுதவிர, தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து, டாக்டர் வரவழைக்கப்பட்டு பைலட்டின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. இதில், சில மருத்துவஉதவிகள் அவருக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, விமானத்தை மீண்டும் இயக்க உயர் அதிகாரிகள் அவருக்கு அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து திட்டமிட்ட நேரத்தை விட, 45 நிமிடங்கள் தாமதமாக அந்த விமானத்தில் ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டு சென்றார்.

சிறுநீரக நோயாளிக்கு உதவிய ஏக்நாத் ஷிண்டே

சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ஜால்கனில் இருந்து மும்பை செல்ல இருந்த ஒரு தம்பதி, தங்கள் விமானத்தை தவறவிட்டு காத்திருந்தனர். இதை அறிந்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தன் தனி விமானத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரையும் மும்பைக்கு அழைத்துச் சென்று உதவினார். இதற்கேற்ப, மும்பை விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

என்றும் இந்தியன்
ஜூன் 13, 2025 17:49

இந்த பைலட் அரசியல் வியாதி ஆக சரியான ஆள்???12 மணிநேரம் விமான பணி???என்னால் இனிமேலும் இயக்க முடியாது???ஏன்??துணை முதல்வர் பயணம் ஆகவே????மிகச்சிறந்த விமானி என்று சொல்லமாட்டார்களா???என்ற ஒரு எதிர்பார்ப்பு???


N Annamalai
ஜூன் 08, 2025 21:03

வேலை செய்ய முடியவில்லை என்று சொன்னது பெரிய விஷயம் .நடுவானில் ஏதாவது செய்வது இன்னும் பெரிய சிக்கல்களை உருவாக்கி இருக்கும் .விமானம் ரயில் பேருந்து வாடகைக்கார் சொந்த கார் ஓட்டும் அனைவர் கவனத்திற்கும் முடியவில்லை என்றால் நிறுத்தி தூங்கி எழுந்து ஒரு டீயை குடித்து விட்டு வண்டி ஓட்டலாம் .அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எதிரில் வரும் உடன் வரும் அனைவருக்கும் நல்லது .


Mohan das GANDHI
ஜூன் 08, 2025 13:58

A PILOT JOB IS NOT SO EASY. THERE ARE SO MANY RESTRICTION ON THEIR TIMINGS SCHEDULE AND ALSO THE HOURS THEY TRAVEL. THIS IS EVEN PASSENGERS SAFETY TOO. EVEN PM, CM, MP, MLA, COUNCILORS ANY BODY CANNOT FORCE THE PILOT WHO WORKED ORE THEN 12 YEARS TO FLY ? ? ? EACH WORK THERE ARE SOME RESTRICTION SHOULD BE FOLLOW WILL BE GOOD. IN EUROPE COUNTRIES THE FLIGHT PILOTS GET GOOD SALARIES BUT THEY WORK ONLY AS SCHEDULED EVEN 2 OR 3 HOURS MECHANIC DELAY THEY CANCEL THE TRIP AND REFUSE TO FLY THIS IS RESPECTED.


மீனவ நண்பன்
ஜூன் 08, 2025 09:00

விமானத்தில் காக்பிட்டில் அரை மணி நேரம் அமர்ந்து பறக்கும் அனுபவத்தை பெற்றிருந்தால் இப்படி சொல்ல மனம் வராது ..


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 07:56

12 மணி நேரம் தொடர்ந்து பணி செய்வது சரியல்ல. அவசர காலத்தில் போதிய முடிவுகள் எடுக்க முடியாது.


Mecca Shivan
ஜூன் 08, 2025 07:13

பன்னிரண்டு மணி நேரமும் விமானத்தை விடாமல் இயக்கியது போல நடிக்கும் இந்த விமானி நிச்சயம் சென்னையில் ஆட்டோ ஓட்ட தகுதிவாய்ந்தவர்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 08:23

சொன்னீங்களே ஒரு வார்த்தை


Sivaprakasam Chinnayan
ஜூன் 08, 2025 09:27

One should see the difficulty from.the pilot angle. Its not driving the vehicle in land. Technically lot of things are there. So do not see on political basis


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை