உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா மினி பாகிஸ்தானா? மஹா., மாநில அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு

கேரளா மினி பாகிஸ்தானா? மஹா., மாநில அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவை 'மினி பாகிஸ்தான்' என விமர்சித்த மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு கேரள முதல்வர் மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளதுமஹாராஷ்டிரா மாநில பா.ஜ.,வைச் சேர்ந்தவர் நிதிஷ் ரானே. மாநில துறைமுக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்.இவர் புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கேரளா 'மினி பாகிஸ்தான்' ஆக மாறி உள்ளது. இதனால், ராகுலும், அவரது சகோதரியும் அத்தொகுதியில் வெற்றி பெறுகின்றனர். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஓட்டுப் போடுகின்றனர். நீங்கள் கேட்டு பார்த்தால், நான் சொல்வது உண்மை என தெரியும். பயங்கரவாதிகளுடன் சென்று அவர்கள் எம்.பி.,க்களாக பதவியேற்று கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு நிதிஷ் ரானேவுக்கு தகுதியில்லை. அரசியல் அமைப்பை அவமதித்து ரகசிய காப்பு பிரமாணத்தை அவர் மீறியுள்ளார். ஆனால், அவர் நாட்டை ஆட்சி செய்யும் அவர் சார்ந்துள்ள கட்சி இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது என்றார்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கூறியதாவது: நிதிஷ் கேரளாவின் மதசார்பற்ற மன நிலையை அவமதித்து உள்ளார். பிரதமர் மோடியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஒரே கருத்தை கொண்டு உள்ளனரா? ஆளும் மார்க்சிஸ்ட் அரசின் நிலைப்பாடு தான், பா.ஜ., விஷம் கக்க தூண்டுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். வயநாட்டு தொகுதி மக்களை, பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து அறிக்கை வெளியிட்டதற்காக காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும் போராடும் எனக்கூறினார்.வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் விஜயராகவன், வகுப்புவாத முஸ்லிம் கூட்டணி காரணமாக, பிரியங்காவும், ராகுலும் அத்தொகுதியில் வெற்றி பெற்றார். அவர்களின் ஆதரவு இல்லாமல் ராகுலால் டில்லி சென்றிருக்க முடியாது. பிரியங்காவின் வெற்றிக்கு பின்னால், பிரிவினைவாத சக்திகளின் பங்கு உள்ளது எனக்கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

lana
ஜன 01, 2025 14:05

ஏண் தேர்தல் பரப்புரை செய்யும் போது பாக் கொடி மற்றும் பாக் தலைவர்கள் போட்ட போஸ்டர் எல்லாம் கொண்டு வந்த முன்னேறிய மாநிலம் தான் கேரளா. தான் வாழ அடுத்த மாநிலத்தில் கழிவு கொட்டும் உன்னதமான எண்ணங்களை கொண்ட மாநிலம். அதை விட அதை தட்டி கேட்க கூட துப்பில்லாத முதல்வர் உள்ள டாஸ்மாக் நாடு எவ்வளவு முன்னேறிய மாடல்


anantharaman
ஜன 01, 2025 07:58

சந்தேகமே இல்லை. முஸ்லிம் கிறிஸ்துவர் மதமாற்றம் மதம் மாறியவர்கள் பாரதத்துக்கு எதிராகத் திரும்ப ஊக்குவிக்கப் படுவது வெளிப்படை. இவர்களுடன் கம்யூனிஸ்டுகள் இணைந்து கேரளாவை நம் நாட்டினின்றும் அன்னியப்படுத்துகிறது என்ற ஐயம் தோன்றும் என்பது உறுதி.


naranam
ஜன 01, 2025 05:41

அதிலென்ன சந்தேகம்!


ஆரூர் ரங்
டிச 31, 2024 22:09

ரொம்ப காலமாக மலப்புரம் மாவட்ட கலெக்டராக முஸ்லிம்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனும் எழுதப்படாத விதி இருந்ததாம்.. இன்னும் கூட கோழிகோடு மலப்புரம் பகுதியில் ரமழான் மாதத்தில் எ‌ந்த உணவகத்தையு‌ம் திறக்க முடியவில்லையாம். அம்மாதத்தில் புதுப்படம் கூட ரிலீஸ் செய்வதில்லை. வளைகுடா சென்று வந்தவர்கள் பலர் திடீரென தீவீர மதவாதியாக ஆகிவிடுகிறார்கள். .மினி ஆப்கான் எனவும் கூட சிலர் கிண்டலாக அழைப்பதைக் கேட்டதுண்டு.


Sudha
டிச 31, 2024 21:41

நூற்றுக்கு நூறு உண்மை


Dharmavaan
டிச 31, 2024 19:23

நிதிஷ் ரானே சொல்வது 200 %உண்மை இந்த உண்மை வெளியே தெரியக்கூடாது என்று காங்கிரஸ் ஆர்பாட்டம் செய்கிறது


venugopal s
டிச 31, 2024 19:21

மஹாராஷ்டிரா அமைச்சருக்கு மும்பையில் குர்லா,மும்பரா, ஜோகேஸ்வரி போன்ற இடங்களைப் பற்றி தெரியாது போலும்.அவற்றை விட கேரளா ஒன்றும் பாகிஸ்தான் போல் மோசமாக இல்லை!


நிக்கோல்தாம்சன்
டிச 31, 2024 19:11

மகாராஷ்டிரா மனுஷன் தப்பா சொல்லிட்டாரா ?


பேசும் தமிழன்
டிச 31, 2024 18:22

உண்மையை தானே கூறி இருக்கிறார்.... கான் கிராஸ் கட்சி ஓட்டு வங்கியே..... பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தான்...... இது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.


Nandakumar Naidu.
டிச 31, 2024 17:32

உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார் நித்திஷ் ரானே. அந்த மினி பாகிஸ்தான் தானே இந்து விரோத, தேசவிரோத, சமூக விரோத காந்தி குடும்பத்தை வென்று நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை