வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்திய சர்வ வல்லமை படைத்த நாடாக உலக அரங்கில் நடை போட வேண்டும். அது மோடிஜி மார்ட்டின் பா. ஜ வால் மட்டுமே முடியும்.
புதுடில்லி: சுற்றுலாவை மேம்படுத்த 2047-ம் ஆண்டிற்குள் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.உலக சுற்றுலா தினத்தையொட்டி டில்லி விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விமான நிலையங்களில் சிறப்பான வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அதன்படி தற்போது நாட்டில் 157 விமான நிலையங்கள் உள்ளதை அடுத்த 20-25 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளது. இதன் மூலம் 2047-ல் உண்மையான விக்சித் பாரத்தை நாம் காணப்போகிறோம். தவிர சாமானியனும் விமான பயணத்தை பயன்படுத்தும் வகையில் உதான் திட்டமும் மேம்படுத்தப்பட உள்ளது என்றார்.
இந்திய சர்வ வல்லமை படைத்த நாடாக உலக அரங்கில் நடை போட வேண்டும். அது மோடிஜி மார்ட்டின் பா. ஜ வால் மட்டுமே முடியும்.