உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிடி ஆயோக் கூட்டத்தில் மம்தா எதிர்ப்பை பதிவு செய்ய திட்டம்

நிடி ஆயோக் கூட்டத்தில் மம்தா எதிர்ப்பை பதிவு செய்ய திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'இண்டியா' கூட்டணி கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், ''மத்திய அரசின் பாரபட்சமான பட்ஜெட் குறித்து நிடி ஆயோக் கூட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்வேன். இதற்காக அந்த கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

புறக்கணிப்பு

நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிடி ஆயோக் உருவாக்கப்பட்டது.மத்திய அரசின் கொள்கைகளை இந்த அமைப்பு வடிவமைக்கிறது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.பிரதமர் மோடி தலைமையிலான நிடி ஆயோக் கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது.சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி, இண்டியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதில் பங்கேற்பதற்காக கோல்கட்டாவில் இருந்து டில்லிக்கு நேற்று மதியம் புறப்பட்டார்.

வெளிநடப்பு செய்வேன்

அப்போது செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:கூட்டத்தில் என் பேச்சை ஏழு நாட்களுக்கு முன் எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி தெரிவித்து இருந்தனர். பட்ஜெட்டுக்கு முன்பே அதை அளித்துவிட்டேன். மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு, என் எதிர்ப்பை பதிவு செய்வேன். மேலும், மேற்கு வங்கம் மற்றும் அண்டை மாநிலங்களை பிரித்தாள, பா.ஜ., அரசு செய்யும் சதி குறித்தும் பேசுவேன்.என்னை பேச அனுமதிக்கவில்லை எனில், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 11:11

வங்கதேச தலைவர்களுக்கு அனுமதி கிடையாது.


C.SRIRAM
ஜூலை 27, 2024 10:19

அரசியல் வாதி


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 07:11

காங்கிரஸ் லாஜிக்கே காலித்தனமானது. முன்னேறிய மாநிலங்களை பின்னேற்ற மது, போதைப்பொருள் விற்பது வேறு விதமான கோட்பாடு. இந்தியாக் கூட்டணியில்த்தான் இல்லையே எப்படி அப்படி ஒரு எண்ணம் தானாகவே வருகிறது...


sankaranarayanan
ஜூலை 27, 2024 06:02

நிதியைப்பற்றித்தான் அங்கே பேச வேண்டும் இவரது ஆட்சியின் கதியைப்பற்றி பேச அது இடமில்லை


sankaranarayanan
ஜூலை 27, 2024 06:02

நிதியைப்பற்றித்தான் அங்கே பேச வேண்டும் இவரது ஆட்சியின் கதியைப்பற்றி பேச அது இடமில்லை


மேலும் செய்திகள்