உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலத்தை வென்ற காந்தக்குரல் மன்னர் ஜெயச்சந்திரன் காலமானார்

காலத்தை வென்ற காந்தக்குரல் மன்னர் ஜெயச்சந்திரன் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 உடல் நலக்குறைவால் காலமானார்.தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dd87ef8a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக கேரளா மாநிலம் திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயச்சந்திரன் காலமானார்.

குடும்பம்

1944 மார்ச் 3 ல் தம்புரான் - சுபத்ரகுஞ்சம்மா தம்பதிக்கு 3வது மகனாக எர்ணாகுளத்தில் பிறந்தார். பிறகு இரிஞ்சாலக்குடா பகுதிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவி, மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இசை மீது ஆர்வம்

சிறு வயதில் இசை மீதான ஆர்வம் கொண்டு இருந்தார். இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், செண்டா கருவி, மிருதங்கம் வாசிப்பதைக் கற்றுக் கொண்டார்.

பரிசு

செங்கமண்டலத்தில் உள்ள அலுவா செயின்ட் மேரீஸ் உயர்நிலை பள்ளியிலும், இரிஞ்சல்குடா தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும் போதும் பாடல்களை பாடினார். வீடருகே இருந்த தேவாலாயத்திலும் பாடல்பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.1958 ல் மாநில பள்ளி இளைஞர் திருவிழாவில் நடந்த விழாவில் மிருதங்கம் வாசிப்பதில் முதல் பரிசையும், லைட் மியூசிக்கில் இரண்டாம் பரிசையும் வென்றார். இரிஞ்சாலக்குடா கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.

திரைப்படத்தில் அறிமுகம்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடலை கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன் நாயர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மலையாள திரைப்படத்தில் பாடும்படி அழைத்தனர். முதலில் மலையாள படங்களில் பாடல்களை பாடத் துவங்கினார். இதன் பிறகு அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முழு நேர பாடகராக மாறினார். தமிழில் பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடல்களை பாடி உள்ளார்.

பெற்ற விருதுகள்

சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதுகேரள அரசின் 5 திரைப்பட விருதுகள்கேரள அரசின் ஜேசி டேனியல் விருதுதமிழக அரசின் கலைமாமணி விருதுஜெயச்சந்திரன் பாடிய மெல்லிசை பாடல்கள்வசந்தகால நதியினிலே, (மூன்று முடிச்சு)கவிதை அரங்கேறும் நேரம், (அந்த 7 நாட்கள்)காத்திருந்து காத்திருந்து, (வைதேகி காத்திருந்தாள்)தாலாட்டுதே வானம் (கடல்மீன்கள்)ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்)சித்திர செவ்வானம் சிரிக்க (காற்றினிலே வரும் கீதம்)அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டாள் )கொடியிலே மல்லிகைப்பூ... (கடலோர கவிதைகள் )அம்மன்கோயில் கிழக்காலே (பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து )புல்லை கூட பாட வைக்கும் புல்லாங்குழல் (என்புருசன் தான் எனக்கு மட்டும் தான்)மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ( கரும்புவில்) உள்ளிட்ட பல போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

சந்திரன்
ஜன 10, 2025 08:55

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே என நம்மை ஆனந்தத்தில் மிதக்க விட்டவர் தற்போது கண்ணீரில் மிதக்க விட்டாரே


Balasubramanian Babu
ஜன 10, 2025 06:28

His melodious voice has captivated so many people across Tamilnadu and Kerala. His devotional music album "Pushpanjali"in Malayalam stands to his credit. May his soul rest in peace


Mani . V
ஜன 10, 2025 06:22

கடவுள் நமக்கு கொடுத்த கொடை திரு. ஜெயச்சந்திரன் அவர்கள். அந்த பொக்கிஷத்தை கடவுள் மீட்டுக் கொண்டு விட்டார். இந்த யுகம் உள்ளவரையிலும் அவரின் குரல் பாடலாக எங்காவது ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் - இடைவெளியே இல்லாமல். அவரின் ஆன்மா எல்லாம் வல்ல இறையின் திருவடிகளில் இளைப்பாறட்டும்.


Naga Subramanian
ஜன 10, 2025 05:38

சிறுவயதிலிருந்தே நம்மையெல்லாம் மகிழ்வித்த பாட்டுக்கள் எத்தனை எத்தனை அனைத்தும் காலத்தினால் அழிக்க முடியாதவை. ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு, மாஞ்சோலைக் கிளிதானோ, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, என்றைக்கும் ஏன் இந்த ஆனந்தமே என அடுக்கிக்கொண்டே போகலாம். இவரது இழப்பு நெஜமாகவே மனது கனக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.


CHARUMATHI
ஜன 10, 2025 09:02

Yes


Raj
ஜன 10, 2025 04:42

எத்தனை நல்ல பாடல்கள் தமிழில் பாடியுள்ளார்.. நல்ல மனிதர். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி.


Rajendran Theivakkani
ஜன 10, 2025 03:19

காலத்தை வென்று பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார்


Rajendran Theivakkani
ஜன 10, 2025 03:14

என்றென்றும் அவரின் பாடல்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்


THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
ஜன 10, 2025 00:12

" வசந்தகால நதியினிலே ... " தேன் இசை இளவரசன் ஜெயச்சந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


Rajan A
ஜன 09, 2025 23:52

Another melody voice lost


எஸ் எஸ்
ஜன 09, 2025 22:56

எம்ஜிஆருக்கு அமுத தமிழில் என்னும் இனிய பாடலை வாணி ஜெயராமுடன் பாடினார். ஓம் சாந்தி