உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வெற்றி பெற்றால் டில்லியில் குடிசைகள் அகற்றப்படாது; பிரதமர் மோடி உறுதி

பா.ஜ., வெற்றி பெற்றால் டில்லியில் குடிசைகள் அகற்றப்படாது; பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.வரும் 5ம் தேதி நடைபெறும் டில்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆர்.கே.புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது. பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இணைந்து செயல்படுவோம். எந்தவொரு பயனுள்ள திட்டங்களையும் ரத்து செய்ய மாட்டோம். டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது. இந்த அறிவிப்பை வெற்று பேச்சுக்காக அறிவிக்கவில்லை. ஆனால், ஆம்ஆத்மி குடிசை விவகாரத்தில் பொய் தகவலை பரப்புகின்றனர். பூர்வாஞ்சலி மற்றும் பிஹாரி சமூக மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஏனெனில், நான் பூர்வாஞ்சல் தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளேன். கோவிட் சமயத்தில் சில கட்சிகள் அவர்களை மோசமாக நடத்தினார்கள். டில்லியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். ஆனால், பா.ஜ., எப்போதும், பூர்வாஞ்சல் மற்றும் பிஹார் மக்களுக்கு ஆதரவாக இருக்கும். பிஹாரில் உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காக மஹானா போர்டு உருவாக்கப்பட்டது. மஹானா சாகுபடியில் தலித் குடும்பத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். எப்போது எல்லாம் தலித் மக்களுக்கான நலத்திட்டங்களை நான் அறிவிக்கிறனோ, அப்போது எல்லாம், எதிர்க்கட்சிகள் என்னை கேலி செய்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ray
பிப் 03, 2025 06:18

Tamil Nadu அர்பன் Habitat Development Board TNUDB, formerly known as Tamil Nadu Slum Clearance Board, is administrated by Government of Tamil Nadu to remove slums in the state. It was formed by Tamil Nadu Slum Areas Improvement & Clearance Act 1971. இந்தியாவிலேயே முதன்முதலில் குடிசைகளை மாற்ற எண்ணி சட்டம் இயற்றியது திராவிட அரசியல் தலைவர் கருணாநிதிதான் மோடி இருபதாண்டு மதமோதல் குஜராத் மாடலில் இல்லை


Barakat Ali
பிப் 03, 2025 10:28

கருணாநிதியின் குடிசை மாற்று வாரிய மோசடி ஐ மறைக்க கூவுகிறது .....


ஆரூர் ரங்
பிப் 03, 2025 10:52

அப்போது இருந்ததை விட இப்போ நூறு மடங்கு குடிசைகள் நீர்நிலைகளில் உருவாகி சென்னை வெள்ளத்துக்கே முக்கிய காரணமாகிவிட்டன. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனே கருணாநிதியின் சொந்த ஊருக்கு அருகிலேயே கீழவெண்மணி சாதிக்கலவரத்தில் 43 தாழ்த்தப்பட்ட பெண்களும் குழந்தைகளும் எரித்துக்கொலை செய்யப் பட்டார்கள். வேறு எங்கும் நடக்காத அளவுக்கு மாஞ்சோலை, வாச்சாத்தி அட்டூழியம் இங்குதான் நடந்தது. தமிழக மத சாதிக் கலவர கொடுமைகளின் வரலாறு மிக நீண்டது.


sankaranarayanan
பிப் 02, 2025 21:12

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இதிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்னவென்றால் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள், இருக்குமிடமெல்லாம் குடிசைவாசிகளுக்கே அங்கேயே வீடுகள் கட்டித்தரப்படும் என்றுதான் அர்த்தம் அதை பிரதமர் நடத்தியும் காண்பிப்பர்


Ray
பிப் 02, 2025 22:07

அவர் குடிசைகள் எக்காலத்திலும் குடிசைகளாகவே இருக்கும்ங்கறார். ராமராஜ்யத்திலும் வண்ணான் குடிசைதான் கேள்விகேட்டு வத்தி வச்சது


முருகன்
பிப் 02, 2025 20:23

சர்வதேச தலைவர்கள் வரும் பொழுது மறைக்கப்படும்


spr
பிப் 02, 2025 19:47

எல்லோருக்கும் வீடு என்று சொல்லிய பாஜக இப்படிச் சொல்லுமளவிற்கு தரம் தாழ்ந்து போனதா? இதைவிட குடிசைகள் அடுக்கு மாடிக்கு குடியிருப்புக்களாக மாற்றப்பட்டு அவர்களுக்குப் பட்டா செய்து தரப்படும் என்று சொல்லியிருக்கலாமே


Priyan Vadanad
பிப் 02, 2025 18:07

அமெரிக்க அதிபர் வந்தால் மட்டும் அவர் கண்ணில் படாமலிருக்க சுவர் கட்டப்பட்டு குடிசைகள் மறைக்கப்படும். செய்வதை சொன்னால் ஏன் எதிர்க்கட்சியினர் கேலி செய்ய போகிறார்கள்?


Priyan Vadanad
பிப் 02, 2025 18:05

நலத்திட்டங்கள் தொடரும் என்கிற பிரதமரின் பேச்சுக்காக அவரை வாழ்த்த வேண்டும். இது நிஜமானது.


Priyan Vadanad
பிப் 02, 2025 17:57

அமெரிக்க அதிபர் வந்தால் மட்டும் அவர் கண்ணில் படாமலிருக்க சுவர் கட்டப்பட்டு குடிசைகள் மறைக்கப்படும்.


அப்பாவி
பிப் 02, 2025 17:57

உங்களை அப்பிடியே வெச்சிருப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை