உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி கவலை

பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பாரம்பரிய மருத்துவம், அதற்கு தகுதியான அங்கீகாரத்தை பெறவில்லை,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.டில்லியின் பாரத மண்டபத்தில் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் 2வது மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், டில்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய அலுவலகத்தையும் அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமுடன் இணைந்து திறந்து வைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gfj8rqf4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: பாரம்பரிய மருத்துவத் துறையில் உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் இங்கு அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தி உள்ளனர். இதற்காக இந்தியா ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்பதில் மகிழ்ச்சி. மேலும் உலக சுகாதார அமைப்பும் இதில் ஒரு முக்கியப் பங்காற்றி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய மையம் இந்தியாவின் ஜாம்நகரில் நிறுவப்பட்டு இருப்பது நமக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இந்தியாவிற்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும். முதல் பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாட்டில் இந்த பொறுப்பை உலகம் மிகுந்த நம்பிக்கையுடன் நம்மிடம் ஒப்படைத்தது.உலகளாவிய கண்ணோட்டத்தில் இந்த உச்சி மாநாட்டின் வெற்றி மிகவும் முக்கியமானது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் அடங்கும். யோகா முழு உலகிற்கு ஆரோக்கியம் சமநிலை மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையை காட்டியுள்ளது. இந்தியாவின் முயற்சிகள் மற்றும் 175க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ன் சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது. யோகாவை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒவ்வொரு தனி நபருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.பாரம்பரிய மருத்துவம் இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கிறது. உலகின் மக்கள் தொகையில் ஒரு பகுதி இதனை சார்ந்துள்ளது. இருப்பினும் பாரம்பரிய மருத்துவத்துக்கு அந்தத் தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே அந்தத் திசையில் நாம் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகள்,இந்த திசையில் முன்னோக்கிச் செல்ல உலகம் தயாராக இருப்பதைக் காட்டியுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 20, 2025 10:33

இவருக்கு இருக்கும் 15 டாக்டர்களில் எத்தனை பேர் பாரம்பரிய மருத்துவர்கள்?


spr
டிச 19, 2025 20:43

"பாரம்பரிய மருத்துவத்துக்கு அந்தத் தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை" இப்படிச் சொல்லும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இதனை அங்கீகாரம் பெறச் செய்ய என்ன முயற்சிகள் எடுத்துள்ளன? நம் பாரம்பரிய மருத்துவத்தின் குறையே ஆங்கில மருத்துவம் போல இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகுமென்று சொல்ல ஏற்ற ஆராய்ச்சி எதுவுமில்லை என்பதே. பொதுவாக மூலிகை மற்றும் சித்த மருத்துவத்தில், EXPIRY DATE என்ற ஒரு நிலையில்லை ஒரு காலம் கடந்தால், அதன் வீர்யம் குறையலாம் ஆனால் ஆங்கில மருத்துவம் வியாபார காரணத்தாலும் ஒவ்வொரு மருந்தையும் பயன்படுத்துவோர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றால்தானே விற்பனை அதிகரிக்கும் அவை வேதியல் பொருட்களால் ஆனது என்பதாலும் காலாவதி ஆகும் நாள் எனக் குறிப்பிடுகிறது அந்த மருந்துகளிலும் உலகத்தில் உள்ள அனைத்து வகையான பக்க விளைவுகளும் ஒரு தலைவலி மாத்திரையைப் போட்டுக் கொண்டாலும் வருமென்று சொல்லித்தான் வியாபாரம் செய்கிறது தமிழகத்தில் "கோவிட் " காய்ச்சல் தாக்கிய போது பல உயிர்களைக் காத்த சித்த மருத்துவத்தை ஆதரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை இவர்கள் அரசியல்வியாதிகள் பேசுவதாலேயே மக்களை ஏமாற்றுகிறார்கள் சீனா மற்றும் ஜப்பான் நாட்டு மருந்துகள் இன்னமும் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன ஆங்கில மருத்துவ மனைகள் மறைமுகமாகத் தடுக்கின்றன. இந்திய அரசு மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவர்களும் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் உண்மை


Iyer
டிச 19, 2025 20:19

எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாத அல்லோபதிக்கு 98% பட்ஜெட் ஒதுக்கீடு செய்கிறீர்கள். பின்னே பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் எங்கனம் கிடைக்கும் ? பயங்கர பக்கவிளைவுகள் கொடுக்கும் ""அல்லோபதி ரசாயனங்களை"" - மருந்து என்ற பெயரில் அனுமதிக்கிறீர்கள் பின்னே பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் எங்கனம் கிடைக்கும் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை