உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கத்தார் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

கத்தார் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையான்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது எனக்கூறியுள்ளார்.காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு அழிக்கும் விதமாக, இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை கத்தார் அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.இந்தத் தாக்குதலில் கத்தார் பாதுகாப்பு படை வீரர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. கத்தார் நாட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பேசினேன். அப்போது தோஹாவில் நடந்த தாக்குதலுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தேன். சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையான்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பதற்றத்தை தவிர்ப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கும் இந்தியா ஆதரவு அளிக்கிறது.பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக இந்தியா நிற்கிறது. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.https://x.com/narramodi/status/1965787289226788992


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழன்
செப் 11, 2025 10:45

ஒரு வீட்டை ஆள்வதே எவ்வளவு கஷ்டம் நாட்டை ஆளவேண்டும் நல்லது செய்தால் பாராட்ட வேண்டும் கெட்டது செய்தால் கண்டிக்க வேண்டும் இது ஒரு அடிப்படை அணுகுமுறை அவ்வளவு தான்


N Sasikumar Yadhav
செப் 11, 2025 10:45

அமிதிமார்க்கம் என ஃபீலா விட்டுக் கொண்டு உலகத்தின் அமைதியை கெடுக்கிற கும்பலுங்க அழிந்தால்தான் இந்த உலகம் அமைதியாக இருக்கும் அதற்கு அந்த அல்லா அருளட்டும்


Gnana Subramani
செப் 11, 2025 08:06

யாருக்கு கண்டனம் தெரிவிக்கிறார். இஸ்ரேல் பெயரே இல்லை.


Indian
செப் 11, 2025 07:17

இப்படி சொன்னா நெதன்யாஹு கோபிச்சுடுவார் ...


Appan
செப் 11, 2025 07:04

டிரம்ப் இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ..அப்போ மோடி டிரம்ப் உடன் சமரசம் செய்து விட்டாரா ..?


அப்பாவி
செப் 11, 2025 06:57

அந்தப் பக்கம் நேத்தன் யாஹுவை கட்டிப் புடிச்சுட்டு இந்தப் பக்கம் கண்டனம்...


ராமகிருஷ்ணன்
செப் 11, 2025 06:26

ஹமாஸ் தீவிரவாதிகள் மற்ற நாடுகளில் பதுங்குவதையும் கண்டித்து இருக்க வேண்டும்


SULLAN
செப் 11, 2025 04:44

உண்மையாகவா???


Khalil
செப் 11, 2025 04:08

காசா மக்களை கொல்றாங்களே? அதுக்கு ஏன் மௌனம்?


Kasimani Baskaran
செப் 11, 2025 04:06

கத்தார் தீவிரவாதக்குழுக்கள் இயங்க தாராளமாக அனுமதித்துக்கொண்டே இஸ்ரேலுடன் சமாதானம் பேசுகிறது. அதை சர்ஜிக்கல் தாக்குதல் போல தாக்கியது தவறு என்று சொல்வது சரியல்ல. தீவிரவாதம் என்ற பேடித்தனம் மனித குலத்துக்கே எதிரானது. அதை எந்த நாடு கையில் எடுத்து அடுத்த நாட்டை மிரட்ட உதவினாலும் அது தீவிரவாத [ஆதரவு] நாடே. இஸ்ரேலின் நிலைப்பாடு மிக மிக சரியானதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை