உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: ஷாங்காய் மாநாடு பயனுள்ளது என பெருமிதம்

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: ஷாங்காய் மாநாடு பயனுள்ளது என பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி லிட் பீரோ உறுப்பினர் காய் குய், நேபாள பிரதமர் ஒலிசர்மா, வியட்நாம் பிரதமர் பாம்மின்சின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.இந் நிலையில் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று தலைநகர் டில்லி திரும்பினார். தமது அரசு முறை பயணம் குறித்து அவர் எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;இந்த பயணம் பயனுள்ளதாக இருந்தது. சீனாவில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் பலரை சந்தித்து உரையாடினேன். அவர்களிடம் உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினேன். உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்நாட்டு அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
செப் 02, 2025 00:48

பயமுள்ளது ... யாருக்கு? அமெரிக்க அதிபர் டிரம்புக்கு.


Priyan Vadanad
செப் 01, 2025 23:56

இந்த முறை நமது பிரதமரின் நெருக்கடியினால் உருவான வெளிநாட்டு பயணம் கண்டிப்பாக நாட்டு நலன் கருதித்தான் என்பதில் நம்பிக்கை வருகிறது. இது தொடரட்டும்.


Tamilan
செப் 01, 2025 23:30

பகல்காமிற்கு சட்ட நடவடிக்கைதான் தீர்வு என்று மோடி முன்னிலையிலேயே தீர்மானம் போட்டுவிட்டார்கள் . மோடிக்கு மூக்கடைப்பு. 100 கோடி மக்களுக்கு மூக்குடைப்பு. ட்ரில்லியன் டாலர் நாட்டுக்கு, பாதுகாப்பு படைக்கு மூக்குடைப்பு . மோடிக்கு மிஞ்சியது அம்பானி அதானிகள் கொள்ளையடிக்க ரசியாவின் எண்ணெய் மட்டுமே ?.


Tamilan
செப் 01, 2025 22:28

எங்கெங்கு போயினும் நாட்டை அடகுவைப்பதே மோடியின் கடமை. மதவாதிகளுக்கு பெருமை


முக்கிய வீடியோ