உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாற்றில் முதல்முறையாக ராணுவ நடவடிக்கைக்கு சுதந்திரம் கொடுத்தார் பிரதமர்: ராணுவ தளபதி திரிவேதி பெருமிதம்

வரலாற்றில் முதல்முறையாக ராணுவ நடவடிக்கைக்கு சுதந்திரம் கொடுத்தார் பிரதமர்: ராணுவ தளபதி திரிவேதி பெருமிதம்

போபால்: ''பாகிஸ்தான் மீதான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்தார். இந்திய வரலாற்றில் இது முதன் முறை நடந்தது'' என ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் உபேந்திர திரிவேதி பேசியதாவது: எல்லையில் இருந்தாலும் சரி, பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, இயற்கை பேரழிவுகளாக இருந்தாலும் சரி, சைபர் அச்சுறுத்தலாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு நமது ராணுவத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. நீங்கள் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கேள்விப்பட்ட படி, கராச்சி தாக்கப்பட்டது. எங்கள் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பலத்துடன் நாங்கள் போராடியதால் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yx8kl04k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானில் எந்த அப்பாவி மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் மட்டுமே நாங்கள் குறிவைத்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு ராணுவ வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஒரு பணி. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி தான் பெயரிட்டார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக, முக்கியமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, பிரதமர் மோடி ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்தார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தைரியம், தன்னம்பிக்கை மற்றும் அமைதி ஆகிய மூன்று முக்கிய கொள்கைகள் ராணுவத்தினரை வழிநடத்தியது. இவ்வாறு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 02, 2025 08:47

காங்கிரஸ் ஆட்சியில் இன்று இருந்திருந்தால் அந்த சுதந்திரம் கிடைத்திருக்காது. பாகிஸ்தானின் அட்டகாசம் இந்தியாவின் மீது அதிகரித்திருக்கும். மோடி ஆட்சியில் இருப்பதால்தான் பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டிருக்கிறது.


Ravichandran Rangaswamy
நவ 02, 2025 08:36

இங்கே சிலருக்கு வயிறு எரியும்


aaruthirumalai
நவ 02, 2025 08:29

நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.


KOVAIKARAN
நவ 02, 2025 08:21

அதே சுதந்திரத்துடன், பிரதமர் அனுமதி பெற்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு, விரைவில் நமது இந்திய மக்களுக்கு 2026 புது வருட பரிசாக கொடுங்கள். செய்வீர்கள் என்று நம்புகிறோம். வாழ்க, வளர்க அகன்ற பாரதம்.


சமீபத்திய செய்தி