உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: இந்தியா வர அழைப்பு

ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: இந்தியா வர அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயர் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்தியான இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும், வலிமையான மற்றும் நெருக்கமான உறவை, கொண்டுள்ளன. சர்வதேச அளவில் அமைதி, விதிகள் அடிப்படையிலான பரஸ்பர வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் அடிகோடிட்டு காட்டினர்.வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, கண்டுபிடிப்பு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை இரு தலைவர்களும் வரவேற்றனர்.இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கவும், இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார காரிடரை விரைவில் அமல்படுத்தவும் இருவரும் உறுதிபூண்டுள்ளனர். அப்போது இந்தியா - ஐரோப்பிய யூனியன் மாநாட்டை இந்தியாவில் விரைவில் நடத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது, ஆன்டோனியோ கோஸ்டா மற்றும் உர்சுலா வென் டெர் லேயன் ஆகியோர் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச விவகாரங்களில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவதன் முக்கியம் குறித்து விவாதித்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tamilan
செப் 05, 2025 00:44

டெல்லியும் ஆடும் மூழ்கிக்கொண்டிருக்கும்போது நாட்டு மக்கள் தத்தளித்துகொண்ண்டு இருக்கும் பொது உல்லாசம் தேவையா?. 26 பேறுக்காக வெளிநாட்டிலிருந்து ஓடோடி வந்து மஸ்க் காட்டிய மோடி , ஒட்டுமொதநாட்டையும் ஸ்தம்பிக்க வாய்த்த மோடி, இப்போது நூற்றுக்கணக்கானோர் பலியான போதும் உல்லாச சுற்றுலாவில் மூழ்கி இருப்பது ஏன்


Shivakumar
செப் 05, 2025 05:24

யாரு இப்போ உல்லசத்துக்கு போயிருக்கா என்று தெரிந்து பேசு தற்குரி.


Tamilan
செப் 05, 2025 16:46

பல நாட்களாக பல வட மாநிலங்கள் தொடர்ந்து தத்தளிக்கிறது . 12 மணிநேரமாக தொடர்ந்து டெல்லி 207.4 மீ ல் மூழ்கிக்கிடக்கிறது . கின்னஸ் சாதனை வரலாற்று சாதனை புரிந்துகொண்டிருக்கிறது . உல்லாச பயணம் மோடிக்கு தேவையா ?


தத்வமசி
செப் 04, 2025 22:20

காசு வேணும்னா இந்தியாவுக்கு வாங்க, இங்கு வர்த்தகம் செய்யுங்க. இந்தியாவின் பக்கம் இருங்க. வேண்டாம் என்றால் வேண்டாம் தான்.


புதிய வீடியோ