உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப்டம்பரில் டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி: வரி விதிப்பு பிரச்னைக்கு வருகிறது தீர்வு

செப்டம்பரில் டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி: வரி விதிப்பு பிரச்னைக்கு வருகிறது தீர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செப்டம்பர் இறுதியில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடும் ஏற்பாடுகள் நடக்கின்றன.அமெரிக்க அதிபர் டிரம்ப், 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரிகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்திய இறக்குமதி பொருட்ககளுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந் நிலையில் நியூயார்க்கில் செப்டம்பரில் ஐநா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் வகையில் பயண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நியூயார்க் கூட்டத்தில் பங்கேற்கும் அதே தருணத்தில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, இருநாடுகள் இடையே வர்த்தகம் தொடர்பாக நிலவும் பிரச்னைகள், வரிகள் விதித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் போது அனைத்து பிரச்னைகள் குறித்து பொதுவான ஒரு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

KRISHNAVEL
ஆக 14, 2025 10:13

இந்தியாவை அமெரிக்க்காவின் அடிமை நாடுகளில் ஒன்றாக்க பார்க்கிறது இது அவர்களின் பரம்பரை உணர்வு, இந்தியா சுயமாக முன்னேறுவதக்கு உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்


அப்பாவி
ஆக 13, 2025 18:46

சீக்கிரம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் பேச்சுவார்த்தை தேறலாம். எது நடந்தாலும் தேஷ்பக்தி, ராஜதந்திரம்னு அடிச்சு உடுவாங்க.


N.Purushothaman
ஆக 13, 2025 15:28

ஐ நா பொது கூட்டத்துல கலந்துக்க முறைப்படி அழைப்பு வரணும் ...அதன் பிறகு தான் பயணத்தை பற்றிய முடிவு எடுக்க முடியும் ...அதுவே இன்னமும் இறுதி செய்யப்படவில்லை ...அதோட பிரதமர் அடுத்த மாதம் மற்றும் செப்டம்பரில் தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் அவரின் பயண திட்டத்தில் உள்ளன ....அமெரிக்காவில் நடக்கிறது என்பதால் பிரதமர் அதை தவிர்க்கவோ அல்லது சைடு லைன் சந்திப்பு ட்ரம்ப்புடன் நடத்தவோ அவர் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எடுக்க மாட்டார் ...சாதக பாதக கணக்குகளை ஆராய்ந்த பிறகே முடிவிற்கு வருவார் ... ...


montelukast sodium
ஆக 13, 2025 13:45

உலக அரங்கில் இந்திய தனித்து விடப்பட்டதுக்கு காரணமே இவர் தான்.


montelukast sodium
ஆக 13, 2025 13:43

தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டாரா


montelukast sodium
ஆக 13, 2025 13:40

சாட்சி காரன் காலில் விழுந்து ஒன்றும் நடக்கவில்லை. அதனால் சண்டைக்காரன் காலில் விழ துணிந்து விட்டார்.


SUBRAMANIAN P
ஆக 13, 2025 12:52

முடிஞ்சா எதாவது ஐடியா, சஜஷன் குடுங்க. பாகிஸ்தான் காரன் மாதிரி பேசாதீங்க..


Ganesh
ஆக 13, 2025 12:16

முதலில் கை கொடுப்போம்.. கை குலுக்கினால் நல்லது...


P. SRINIVASAN
ஆக 13, 2025 12:02

வேஸ்ட் சந்திப்பு...


SUBRAMANIAN P
ஆக 13, 2025 12:40

நீ பாகிஸ்தான்காரன் தானே


P. SRINIVASAN
ஆக 13, 2025 12:01

எடப்பாடி மோடிக்கு அடிமை.. மோடி டிரம்ப்கு அடிமை.. ஒன்னும் எடுபடாது...