உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் கனவை நிஜமாக்கினார் பிரதமர் மோடி: அமித்ஷா பெருமிதம்

ராமர் கோயில் கனவை நிஜமாக்கினார் பிரதமர் மோடி: அமித்ஷா பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ கனவாக இருந்த ராமர் கோயிலை, பிரதமர் மோடி நிஜமாக்கினார் '' என லோக்சபாவில் ராமர் கோயில் தொடர்பாக நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.லோக்சபாவில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் கும்பாபிஷேகம் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை பா.ஜ., எம்.பி., சத்யபால் சிங் துவக்கி வைத்து பேசினார். பல கட்சி எம்.பி.,க்கள் இந்த விவாதம் மீது பேசினர்.இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவாதத்தின் மீது பேசியதாவது: ராமர் கோயில் இயக்கத்தை புறக்கணித்து நாட்டின் வரலாற்றை யாரும் படிக்க முடியாது. 1528 முதல் ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்தது. ராமர் கோயில் என்பது கனவாக இருந்தது. ஆனால், அதனை மோடி அரசு நிஜமாக்கியது. ஆயிரக்கணக்கான வரலாற்றில் ஜன.,22 முக்கிய இடம் பெறும். சிறந்த இந்தியாவிற்கான துவக்க நாளாக அமைந்துள்ளது. கோயிலுக்காக 1528 முதல் நடந்த போராட்டத்தையும், 1858 முதல் நடந்த சட்டப் போராட்டத்தையும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடித்து வைத்தது. ராமர் கோயில் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காட்டியது. வேறு எங்கும் பெரும்பான்மை சமூகம் தனது நம்பிக்கைக்காக இவ்வளவு காலம் சட்டப்பூர்வமாக போராடியது இல்லை. ராமர் கோயில் கட்டுமானம் என்பது போராட்டத்தில் இருந்து பக்திக்கான பயணமாக இருந்தது. ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நாங்கள் துணை நிற்போம் என பிரதமர் மோடியும் பா.ஜ.,வும் உறுதியுடன் தெரிவித்தனர். பிரதமர் மோடி 11 நாட்களாக ராம பக்தியில் மூழ்கினார். ராமர் கோயில் குறித்து மக்களிடம் அத்வானி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மோடி நிஜமாக்கினார். மோடி இல்லாவிட்டால் ராமர் கோயில் கட்டுமானம் சாத்தியம் ஆகியிருக்காது. அமைதியான முறையில் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தில் அரசியல் முழக்கம் இல்லை. அயோத்தி விமான நிலையத்திற்கு பல பெயர்களை சூட்ட பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், துறவி வால்மீகி பெயரை பிரதமர் தேர்வு செய்தார். அனைத்து சமூக மக்களையும் பிரதமர் அழைத்து செல்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

ஒவைஸி கேள்வி

இந்த விவாதத்தின் மீது ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைஸி பேசியதாவது: மோடி அரசு குறிப்பிட்ட ஒரு மதத்திற்கானதா? அல்லது ஒட்டு மொத்த நாட்டிற்கானதா? இந்திய அரசுக்கு எந்த மதமும் உள்ளதா? இந்த நாட்டிற்கு என மதம் ஏதும் இல்லை என நான் கருதுகிறேன். நாட்டில் உள்ள 17 கோடி முஸ்லீம்களுக்கு என்ன மாதிரியான செய்தியை அனுப்புகிறீர்கள்? நான் என்ன பாபர், ஜின்னா அல்லது அவுரங்கசிப்பின் செய்தித்தொடர்பாளரா? நான் கடவுள் ராமரை மதிக்கிறேன். ஆனால், கோட்சேவை வெறுக்கிறேன். ஏனென்றால், கடைசியாக ‛ ஹே ராம் ' என சொன்னவரை சொன்னவர் அவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

A1Suresh
பிப் 10, 2024 22:15

ஹிந்துக்களில் பெரும்பாலோர் வக்கிரபுத்தி படைத்தவர்களாக இருப்பது துர்பாக்கியமானது. அதாவது "மாற்று மதத்தினரை பொதுவெளியில் ஆதரித்தால் தம்மை உலகம் நேர்மையாளன்" என்று போற்றும் என நினைத்து இப்படி பலரும் பாபர் மசூதியை ஆதரிக்கின்றனர். அவ்வாறே நேரு காலம் முதல் மதச்சார்பின்மை பேசும் நிலை வேதனையானது. எந்த முஸ்லிமோ, கிருத்துவரோ, பௌத்தரோ, சமணரோ இப்படி வக்கிரமாக பேசுவதே இல்லை. முழுமூடர் கூடமாக நம்மை மாற்றி விட்டது ஆங்கிலேயே அரசாங்கம் மற்றும் அதன் மெக்காலே கல்வி அமைப்பு. இது முற்றிலுமாக மாற வேண்டும்.


A1Suresh
பிப் 10, 2024 22:11

கி பி ஆயிரத்து ஐநூற்று இருபத்து எட்டாம் ஆண்டில் மீர்பாக்கி என்ற தளபதியை வைத்து பாபர் அங்கிருந்த ஜன்மபூமி திருக்கோயிலை இடித்தார். இதனை தன் கைப்பட பார்சி மொழியில் எழுதிய "பாபர் நாமா" என்னும் சுயசரிதை நூலில் விளக்கி இருக்கிறார் பாபர். இதனை ஆனந்த விகடன் இணையாசிரியர் மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்" என்ற நூலில் விளக்கினார். படிக்க தெரிந்தவர்கள் படித்து பாருங்கள்.


g.s,rajan
பிப் 10, 2024 19:58

இனிமே நம் நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளை எழுதிக் கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களிடம் மக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்,வாய்ப்பேச்சாகச் சொன்னால் அதை இல்லை என்றும் எப்போ சொன்னேன் என்று கூறி மழுப்பி விடுவார்கள் ,அப்புறம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கறுப்புப்பணத்தைக் கொண்டு வந்தா அது இதுன்னு அந்தப் பதினைந்து லட்சம் விஷயம் மாதிரி மக்கள் எதையும் கேட்க முடியாதபடி ஒண்ணுமே இல்லாமப் போயிடும்.....


g.s,rajan
பிப் 10, 2024 19:24

நம் நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களின் கனவை இதே போல் ஜி விரைவில் நனவாக்குவாரா...??


g.s,rajan
பிப் 10, 2024 19:16

இந்தியாவில் உள்ள இந்துக்களின் ஓட்டு வங்கியைக் குறி வைத்தே ராமர் கோயில் தேர்தலுக்கு முன் திறக்கப்பட்டது....


Viswam
பிப் 10, 2024 22:34

ராசா அவங்க சொன்னதை செஞ்சாங்க , அப்ப அதை திறக்க முழு அதிகாரமும் உண்டு .எங்கே நோவுது ?


ஆரூர் ரங்
பிப் 11, 2024 18:42

சென்னை மக்களை மகிழ்விக்கவே???? அரைகுறையாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் .(முன்பு ஆயில் டாங்க் வடிவ அரைகுறை தலைமைச் செயலகமும் மேலே 2 கோடி ரூபாய்க்கு செட்டிங்ஸ் போட்டு திறக்கப்பட்டது நினைவிருக்கலாம்)


Indian
பிப் 10, 2024 18:11

மிகவும் அவசியமான மக்களின் ருபாய் பதினைந்து லட்ச கனவை நிறைவேற்றவில்லையே


Oviya Vijay
பிப் 10, 2024 17:51

அது ராம ஜென்ம பூமி அல்ல. அது சக மதத்தவரின் நம்பிக்கையை கொன்று புதைத்த மயான பூமி.


ஆரூர் ரங்
பிப் 10, 2024 19:15

முதலில் இடித்தது மயான அமைதி மார்க்கம்தானே?


Viswam
பிப் 10, 2024 19:54

தப்பா ஒரு ஐநூத்தி சொச்சம் வருஷம் கழிச்சு பொறந்துடீங்களே


ஆரூர் ரங்
பிப் 11, 2024 18:44

இதனை 100 ஆலயங்களை இடித்தோம் என்று பெருமையுடன் பேசிய டிப்பர் பாலு கட்சி???? கூறுகிறதா?


ஆரூர் ரங்
பிப் 10, 2024 16:34

அடிக்கடி பாரத் மாதா கி ஜெய் என்றார்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ