உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனைகள் என மொத்தம் 110 பேர் களமிறங்கினர். இதில் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. பதக்கம் வென்றவர்கள் இன்று (ஆக.,15) சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.

பரிசளிப்பு

ஒவ்வொரு வீரரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என இரண்டு வெண்கலம் வென்ற மனு பாகர், பிரதமர் மோடிக்கு ஏர் பிஸ்டலை பரிசாக அளித்தார். அதேபோல், வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஹாக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர். பின்னர் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, ஒலிம்பிக் போட்டி அனுபவங்களை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rpalnivelu
ஆக 15, 2024 16:22

மக்களும் மீடியாக்களும் கிரிக்கெட் கிரிக்கெட் என்று ஓர் சிலரை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கும் வரை ஒலிம்பிக் பதக்கம் என்றென்றும் பாரதத்திற்கு கானல் நீர்தான்.கிரிக்கெட் போன்ற சோம்பேறி ஆட்டம் பாரதத்திற்கு தேவையில்லை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி