உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்கோலியா அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; 70 ஆண்டுகால இருதரப்பு உறவுகளுக்கு பாராட்டு

மங்கோலியா அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; 70 ஆண்டுகால இருதரப்பு உறவுகளுக்கு பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் மங்கோலியா அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், இந்தியா மற்றும் மங்கோலியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள 70 ஆண்டுகால இருதரப்பு உறவுகளைப் பிரதமர் மோடி பாராட்டினார்.இந்தியாவிற்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாக மங்கோலியா அதிபர் குரேல்சுக் உக்னா வந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியை குரேல்சுக் உக்னா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நண்பர்களை சந்தித்தனர்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: அதிபர் குரேல்சுக் உக்னா மற்றும் அவரது பிரதிநிதிகளை இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மங்கோலியா அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.மங்கோலியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கான புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் இந்தியா தொடங்கும். இந்தியா-மங்கோலியா உறவை வெறும் ராஜதந்திர உறவுகள் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக புத்த மதத்தின் மூலம் கலாசார தொடர்புகளில் வேரூன்றியது. இரு நாடுகளுக்கும் இடையிலான 70 ஆண்டுகால இருதரப்பு உறவு பாராட்டுக்குரியது. மங்கோலியாவின் வளர்ச்சியில் இந்தியா ஒரு உறுதியான மற்றும் நம்பகமான கூட்டாளியாகும்.1.7 பில்லியன் டாலர் கடன் மூலம் மங்கோலியாவில் கட்டப்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாகும். எங்கள் உறவுகளை வலுப்படுத்தியுள்ளோம். மேலும் எங்கள் கண்டுபிடிப்பு பணிகள் மூலம் மங்கோலியா இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

நன்றி சொன்ன மங்கோலியா அதிபர்!

மங்கோலியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் மங்கோலியா அதிபர் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 'எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானம் மங்கோலியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது எரிசக்தி தேவைகளைப் பாதுகாப்பதில் மிகவும் முக்கியமானது. இது இந்தியா-மங்கோலியா உறவுகளின் ஒரு முக்கிய அடையாளமாகும். மேலும் நமது நாட்டின் செழிப்புக்கு பங்களிக்கும், என்றார்.

மரக்கன்று நடவு

பிரதமர் மோடி மற்றும் மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா ஆகிய இரு நாட்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு ஒரு மரக்கன்றை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
அக் 14, 2025 18:31

70 ஆண்டு உறவா? இருக்காதே... 2014 க்கு அப்புறம் தானே இந்தியாவே பொறந்திச்சி..


vivek
அக் 14, 2025 20:16

எவளோ வருஷம் ஆனாலும் உனக்கு அறிவு வராதோ கோவாலு


HoneyBee
அக் 14, 2025 21:33

முரசொலி படிச்சா இப்படி தான் இருக்கும் ₹200 ஊபிஸ்னா புத்தி அம்புட்டு தான்னு அர்த்தம்


சமீபத்திய செய்தி