துர்கா பூஜையில் பிரதமர் மோடி : நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காக பிரார்த்தனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அஷ்டமியை முன்னிட்டு, டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள துர்கா பூஜை பந்தலுக்கு சென்ற பிரதமர் மோடி, வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்.டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா அல்லது சிஆர் பூங்கா என அழைக்கப்படும் பகுதிகளில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். துர்கா பூஜையை முன்னிட்டு இங்கு பல இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i81f91gy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று அந்த பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி துர்கை பந்தலில், வழிபாடு நடத்தினார். துர்கை மந்திரங்களை கூறி பிரார்த்தனையில் ஈடுபட்ட பிரதமர், காரி பாரி கோவிலிலும் ஆரத்தி காட்டி பிரதமர் வழிபாடு நடத்தினார்.இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மஹா அஷ்டமியை முன்னிட்டு, டில்லியின் சித்ரஞ்சன் பூங்காவில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பங்கேற்றேன். இந்த பூங்கா வங்காள கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. அனைவரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காக வழிபாடு நடத்தினேன் எனக்கூறியுள்ளார்.https://x.com/narendramodi/status/1973051746420162831