உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி திரும்பினார் பிரதமர் மோடி

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டில்லி திரும்பினார்.பிரதமர் மோடி அரசு முறை பயணமாக போலந்து சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து பேசினார்.பிறகு அங்கிருந்து நேற்று (ஆக.,23) ரயில் மூலம் உக்ரைன் சென்றார். அங்கு போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று டில்லி திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.Isaac
ஆக 24, 2024 14:23

அப்படியே இம்பால் வழியாக வந்திருக்கலாமே.


G Mahalingam
ஆக 24, 2024 15:36

மாநில முதல்வரே வேங்கை வயல் , கள்ளக்குறிச்சி தமிழ் நாட்டில் இருக்கு அங்கு போக வில்லை. ஆனால் அமெரிக்கா பயணத்திற்கு பின் போக வேண்டும். மணிப்பூர் மாநில முதல்வர் அங்கு பல தடவை போய் உள்ளார்.


Amsi Ramesh
ஆக 24, 2024 15:59

அந்நிய பாசம்


TSRSethu
ஆக 24, 2024 14:21

இது போன்ற பாதுகாப்பற்ற பயணங்களை மோடி மேற்கொள்ள வேண்டிய அளவிற்கு எந்த நாடும் நமக்கு முக்கியமல்ல