உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்காக வீடு கட்டவில்லை; டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்!

எனக்காக வீடு கட்டவில்லை; டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை' என டில்லியில் நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர் பல கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. புதிதாக பிறந்துள்ள இந்த 2025ம் ஆண்டில் இந்தியா மேலும் வலுப்பெறும். இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2m3rz7qu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சொந்த வீடு

இன்று டில்லிக்கு முக்கியமான நாள். வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. வீடுகள் வழங்கி 4 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றினேன். எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வளர்ந்த இந்தியாவில் சொந்த வீடுகளை வைத்து இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டு மக்களுக்கு சொந்த வீடுகள் இருக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, சில குழந்தைகளை சந்தித்தபோது, ​​அவர்களின் கனவுகள் அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை விட உயர்ந்ததாக இருப்பதை என்னால் காண முடிந்தது.

மோசடி

டில்லி அரசு 10 ஆண்டுகளில் கல்விக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் நிதியை டில்லி அரசு பாதியை கூட செலவிடவில்லை. டில்லி கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. மதுக்கடைகளில் ஊழல், அரசுப்பள்ளிகளில் ஊழல் என பல வழிகளில் மோசடி நடந்து வருகிறது. இன்று வீடுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அனைவரின் மகிழ்ச்சியில், பங்கு கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். இன்று முழு நாடும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

K.n. Dhasarathan
ஜன 03, 2025 21:13

உங்களுக்கு எதற்கு வீடு ? வருடத்தில் 364 நாட்கள் சுற்றுலாவிழாவில் இருக்கிறீர்கள், எல்லாம் மக்கள் பணம், அந்த ஒரு நாள் என்னவென்றால் நீங்க பதவி ஏற்ற நாள்தான், பிறகு எதற்கு இந்த நடிப்பு ? சிவாஜி கணேசன் இருந்திருந்தால் உங்கள் நடிப்பை பார்த்து உங்களையே குரு என்று சொல்லியிருப்பார், இனியும் மக்கல் ஏமாற மாட்டார்கள், ஒரு மாற்றத்திற்குத்தான் மைனாரிட்டி அரசாக ஆக்கினார்கள். கண்டிப்பாக அடுத்த முறை வீட்டுக்கு தான்.


Jagannathan Narayanan
ஜன 04, 2025 07:04

சிறந்த முட்டு


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 20:16

இவர் குடிக்கிற தண்ணி, டீ முதல், சப்பாத்தி குருமா, போடற ட்ரெஸ், கண்ணாடி முதல் செருப்பு வரை ஊரான் வீட்டு பணம். இதுல இன்னும் வீடு வேற வேணுமா??


J.Isaac
ஜன 03, 2025 19:23

மனைவி தனியாக வாழும் போது வீடு எதற்கு ?


Constitutional Goons
ஜன 03, 2025 19:10

வீடுகட்டவில்லை . ஆனால் ஊர் சுற்ற உலகம் சுற்ற பில்லியன் டாலர்கள் செலவானது . பந்தாவிற்கு டிரில்லியன் டாலர்கள் செலவானது


arumugam
ஜன 03, 2025 17:43

நல்ல மனுஷன். எப்போதும் ஏழை கள் நினைப்பு தான். அண்ணனுக்கு மிச்ச சொச்சம் விருதுகள் பார்சல்.


pmsamy
ஜன 03, 2025 17:15

மக்களுக்கு ஏமாற்றம் துரோகம் மட்டுமே கொடுத்த மோடி


infoway.ganesh
ஜன 03, 2025 16:59

ஊழல் செய்யாமலும், எளிமையாகவும் இருப்பதால் தான் மக்கள் உங்களுக்கு இதுவரை தோல்வியே கொடுத்து இல்லை.


J.Isaac
ஜன 03, 2025 19:25

மற்றவர்கள் ஊழல் செய்ய துணை போவதும் குற்றம் தானே.


M Ramachandran
ஜன 03, 2025 16:46

அப்படியே எங்கள் ஏழை ராகுலுக்கு அவர் மனம் குளிர ஒரு வீடு கட்டி தாருங்கள்.


Sampath Kumar
ஜன 03, 2025 16:34

என்னத்துக்கு கட்டணும் உங்க பங்காளிகள் கட்டி தருவார்கள் அப்புறம் ஏன் இந்த பசப்பு பேச்சு


Kumar Kumzi
ஜன 03, 2025 16:54

தெருவுக்கு தெரு சிலைகள் பேணா நினைவு சின்னம்னு ஒரு ஊழல்வாதிக்கு மக்களின் வரி பணத்தை வீணடிக்குறானே ஓங்கோல் அதையும் கேளு கூமுட்ட


Senthoora
ஜன 03, 2025 16:08

உங்களுக்கு என்ன, அதானியின் மளிகை இருக்கு, இவர் தனம், தினம் புது உடை போடுவார், போட்ட உடை திரும்ப போடமாட்டார், போகாத நாடு இல்லை. இதெல்லாம் சேர்த்தா, 10 வீட்டு கட்டியிருக்கலாம்.


ஆரூர் ரங்
ஜன 03, 2025 16:32

என்னது அடானி மளிகையா? புதுப் பெயரா இருக்கே.


A.C.VALLIAPPAN
ஜன 03, 2025 17:33

prime minister will walk with good dress . just check your status accordingly wear the dress you dont have dress just sit in the home take 200


புதிய வீடியோ