உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை விரைவில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை விரைவில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கோல்ட்டா- குவஹாத்தி இடையே விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3xl21akb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து நிருபர்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: பல்வேறு நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாட்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கோல்ட்டா- குவஹாத்தி இடையே விரைவில் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் கட்டணங்கள் விமானப் பயணத்தை விட கணிசமாகக் குறைவாக இருக்கும். இந்த ரயில் சேவைகள் அடுத்த 15-20 நாட்களில், அநேகமாக ஜனவரி 18 அல்லது 19ம் தேதி அன்று செயல்பாட்டிற்கு வரும். நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், அனைத்தும் உறுதியாகிவிட்டது. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சரியான தேதியை நான் அறிவிப்பேன். குவஹாத்தியில் இருந்து கோல்கட்டாவில் உள்ள ஹவுரா விமானப் பயணத்திற்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை செலவாகும். வந்தே பாரத் ரயிலில், முதல் பிரிவு ஏசி வசதியில் பயணத்திற்கு ரூ.3,600 ஆகும். நடுத்தர வர்க்கத்தினரைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புல்லட் ரயில் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தயாராகிவிடும். முதலில் குஜராத் மாநிலம் சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி முதல் ஆமதாபாத் வரை இயக்கப்படும். கவச் அமைப்பு செயல்படுத்தும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது. கவச் என்பது ஒரு மிகவும் சிக்கலான அமைப்பு. உலகின் வளர்ந்த நாடுகள் 20, 25, 30 ஆண்டுகளில் செய்ததை, நாம் ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் இந்த பணியை முடித்துவிடுவோம். இது மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கலானதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சண்முகம்
ஜன 02, 2026 06:48

பலே பலே! பிரதம ஸ்டேக்ஷன் மாஸ்டர் பச்சை கொடி காட்ட ரெடி.


PerArivalan
ஜன 01, 2026 18:04

வாழ்த்துக்கள்


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 17:34

அந்த புல்லட் ரயில் எப்போது வரும்? 2047?


vivek
ஜன 01, 2026 18:16

அது வரும் தண்டவாளத்தில் தலை வைக்க போகிறாயா பொய்யே


தியாகு
ஜன 01, 2026 16:44

இதுமாதிரி விரைவு ரயில்கள் சுமார் 70 வருடங்களுக்கு முன் இருந்திருந்தால் திருட்டு ரயிலேறி வந்த ஒருவர் ஊழல்களாலும் லஞ்சத்தாலும் டுமிழ்நாட்டை ஆட்டையை போட்டதை தடுத்திருக்கலாம்.


நாஞ்சில் நாடோடி
ஜன 01, 2026 16:29

பாரதம் எனது பெருமை. பாரதம் நமது பெருமை. உலகின் குரு பாரதம் என்று சொல்லி தேச பக்தனே அணி திரண்டிடு ...


aaR Kay
ஜன 01, 2026 16:08

எந்த நல்ல விஷயத்தையும் ஆதரிக்க மாட்டீங்க... கடைசி வரை கோபாலபுர கொத்தடிமையா தான் இருக்கு போறீங்க


SUBBU,MADURAI
ஜன 01, 2026 15:56

New information for the New Year. Lets get ready to race at bullet speed.


Narayanan Muthu
ஜன 01, 2026 15:46

நெப்போலியன் ஒரு படத்துல சொல்வான் பாரு கல்யாண வீடா இருந்தா நாந்தான் மாப்பிள்ளையா இருக்கணும். எழவு வீடா இருந்தா நான்தான் பொனம்மா இருக்கணும்னு. அந்த ராகம் இவரு.


தியாகு
ஜன 01, 2026 16:36

ஆனாலும் முதல்வர் ஸ்டாலினை நீங்கள் இப்படி கலாய்க்கக் கூடாது.


Kumar Kumzi
ஜன 01, 2026 16:56

ஓசிகோட்டருக்கு வக்கில்லாம ஓவாவுக்கு ஓட்டு போடுற பிச்சைக்காரன் வேறு எப்படி கருத்து சொல்லுவா


vivek
ஜன 01, 2026 18:17

இந்த சொத்தையின் வளர்ப்பு அப்படி


முக்கிய வீடியோ