உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டம்: பிரதமர் மோடி வரவேற்பு

அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டம்: பிரதமர் மோடி வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார் என நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''காசா போர் நிறுத்தம் குறித்த அதிபர் டிரம்பின் விரிவான திட்டத்தை வரவேற்கிறோம். அதிபர் டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால மற்றும் நிலையான அமைதியை வழங்குகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.டிரம்பின் திட்டங்களை வரவேற்று எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் டிரம்பின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 30, 2025 20:01

நோபல் பரிசை ரெண்டு பேருக்கும்.பகிர்ந்து குடுத்துரலாம்.


Ayappan
செப் 30, 2025 13:23

ஆசை அதிகம் கூடாது


Ahamed
செப் 30, 2025 12:45

நல்லது மிக்க மகிழ்ச்சி காசா போரை நிறுத்தினால் முதலில் எனக்கு தான் மகிழ்ச்சி...


Sivak
செப் 30, 2025 15:53

நீ ? அப்படிதான் சொல்லுவே


Ramesh Sargam
செப் 30, 2025 12:26

நோபல் பரிசு அமைப்பினர் தலையை பிய்த்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே இவர் ஏழு போரை நிறுத்தி இருக்கிறேன். ஆகையால் எனக்குத்தான் அந்த அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். ஒருவேளை இந்த காசா போரையும் நிறுத்திவிட்டால், எங்கே அவரே அந்த பரிசை எடுத்துக்கொண்டுவிடுவாரோ என்று கலங்கி, குழம்பிப்போய் உள்ளனர் நோபல் பரிசு அமைப்பினர்.


Moorthy
செப் 30, 2025 10:55

ஹமாஸ் முடிவு என்ன ? ஒரு வருடத்துக்கு மேல் தாக்குதல் நடத்தெயும் , பிணைய கைதிகளை ஏன் மீட்க முடியவில்லை ?


Anand
செப் 30, 2025 10:43

ட்ரம்ப் காலையில் ஒரு பேச்சு பேசுவார் மாலையில் வேற மாதிரி பேசுவார், அவரோட பேச்சை நம்பி யாரும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது.


Sundar
செப் 30, 2025 10:41

நோபல் பரிசு தயார். ரஷ்யா உக்ரைன் மட்டுமே பாக்கி.


முக்கிய வீடியோ