உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10ம் தேதி மோடி வயநாடு வருகை

10ம் தேதி மோடி வயநாடு வருகை

வயநாடு; வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட 10-ம் தேதி பிரதமர் மோடி. வயநாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரள மாநிலம். வயநாடு மாவட்டத்தில் கடந்த, 30ம் தேதி முண்டக்கல், சூரல்மலை ஆகிய இரு பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இதுவரை இல்லாத வகையில் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதுவர 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி பார்வையிட கேரளா வருகிறார்.கண்ணுர் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.மோடியுடன் கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஆக 08, 2024 16:22

அஞ்சடுக்கு பாதுகாப்பு ... ஏற்கனவே கேரளா தள்ளாடுது. பேசாம எலிகாப்டரில் பாத்துட்டு போயிடலாம்.


Sampath Kumar
ஆக 08, 2024 09:40

அய்யொ அய்யா வாரா ரூ சொம்பை ஏடுத்து ஒளித்து வைங்க அப்பா


hari
ஆக 08, 2024 10:20

உனக்கு 200 வந்துச்சா....


Kasimani Baskaran
ஆக 08, 2024 05:32

வீடிழந்தவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடு கட்டிக்கொடுக்க மத்திய/மாநில அரசுகள் முயல வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2024 11:59

அந்த வுடுகளையாவது தமிழகத்தில் இருந்து கல்லும் மண்ணும் திருடிக் சென்று கட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள். அப்படியே அபரிமிதமான தண்ணீர் வரும் போது தமிழகத்தின் பக்கம் கொஞ்சம் திருப்பி விட்டால் அவர்கள் ஊரில் வெள்ளம் வராது என்று கூறுங்கள். இனிமேலாவது தமிழகத்தில் இருந்து கல்லும் மண்ணும் அரசே திருடுவதை நிறுத்த சொல்லவும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை