உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் வீரபத்ரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

ஆந்திராவில் வீரபத்ரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

விஜயவாடா: ஆந்திராவின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் மோடி இன்று(ஜன.,16) வழிபாடு நடத்தினார்.அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாக கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் மஹாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயிலுக்கு சென்ற மோடி பிரார்த்தனை செய்தார். அதற்கு முன்னர் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் மோடி ஈடுபட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=be6uuk78&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று ஆந்திரா சென்றுள்ள பிரதமர் மோடி, லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு வந்த மோடியை நிர்வாகிகள் வரவேற்றனர்.கேரளா செல்லும் பிரதமர் மோடி நாளை காலை 7:30 மணிக்கு குருவாயூர் கோயிலிலும், வரும் 21 ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலும் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 21, 2024 15:46

சூப்பர்ப் ..........


Sathyasekaren Sathyanarayanana
ஜன 17, 2024 06:58

நரேந்திர மோடி அவர்களின் மனஉறுதி வியப்பு அளிக்கிறது. ராமானுஜர், விவேகானந்தர் வரிசையில் இந்துக்களை எழுச்சி கொள்ள அவதரித்த மஹான். வாழ்க வளமுடன். ஜெய் ஹிந். வந்த மாதரம்.


Ramesh Sargam
ஜன 16, 2024 23:56

அனைத்து கடவுளின் அருளும் நம் பாரத்தமருக்கு கிடைக்கட்டும். அவரால் நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல உண்டாகட்டும். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஸ்ரீ சீதா தேவி. ஓம் நம சிவாய.


mrsethuraman
ஜன 16, 2024 17:00

எல்லாம் நல்லபடியாக நடப்பதற்காக.வரும் 22 ம் தேதி வரை பிரதமர் ஆன்மீக யாத்திரையில் தான் இருப்பார்.


Seshan Thirumaliruncholai
ஜன 16, 2024 16:07

நரேந்திரன் (மோடி) நாட்டின் பிரதமர். அவர் ஹிந்து. ஹிந்து தேசம் ஒவ்வொருக்கோயிலாக போகிறார் ராகுல் ஹிந்து கோயிலுக்கு சென்றால் செய்தி.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி