உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்கள்; செலவு விபரங்கள் இதோ!

பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்கள்; செலவு விபரங்கள் இதோ!

புதுடில்லி: கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசு முறைப் பயணங்களுக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கையை ஏற்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்ஹெரிட்டா ராஜ்சபாவில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். அவர், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் 2024ம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.258 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அமெ ரிக்கா, போலந்து, உக்ரைன், ரஷ்யா, இத்தாலி, பிரேசில், கயானா, ஜெர்மனி, குவைத், டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, எகிப்து, தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.ஜூன் 2023ல் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்காக ரூ.22 கோடிக்கு மேல் செலவிடப்பட்டது. மற்ற நாடுகள் விபரம் வருமாறு:போலந்து: ரூ. 10,10,18,686உக்ரைன்: ரூ. 2,52,01,169ரஷ்யா: ரூ. 5,34,71,726இத்தாலி: ரூ. 14,36,55,289பிரேசில்: ரூ. 5,51,86,592கயானா: ரூ. 5,45,91,495ஜப்பான்: ரூ.33 கோடிஜெர்மனி: ரூ.23.9 கோடிஐக்கிய அரபு அமீரகம்: ரூ.12.7 கோடிபிரதமர் மோடி 2022ம் ஆண்டில் 8 நாடுகளுக்கும், 2023ல் 10 நாடுகளுக்கும், 2024ல் 16 நாடுகளுக்கும் அரசு முறைப் பயணம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

TRE
மார் 22, 2025 19:16

நாம சந்தோசமா இருக்கோமோ இல்லையோ நாட்டுல ஆனா பிரதமர் சந்தோசமா இருக்கிற நாட்டுல இருக்கோம்


Ray
மார் 22, 2025 12:54

அப்படியே டெபாசிட் விபரங்களையும் போட்டா மக்களும் பெருமிதத்துடன் நம்ம பிரதமர் எவ்ளோ பெரிய செல்வந்தர் என்று மகிழ்ச்சியடைவார்கள்


Suppan
மார் 21, 2025 21:31

ஒரு தமிழ் செய்தி காட்சி ஊடகம் இதே விஷயத்தை எப்படிப்பகிர்ந்தது? மோதியின் அமெரிக்கப்பயணச்செலவு ரூபாய் 259 கோடி . இதுதான் திராவிடத்தின் கட்டுப்பாட்டில் லட்சணம்


Sivagiri
மார் 21, 2025 20:40

ஆனாலும் அந்த 4000 கோடிக்கு இன்னும் விடை தெரியலை போல . . .


B MAADHAVAN
மார் 21, 2025 18:52

செலவுகளை பார்க்கக் கூடாது. அதனால் நாட்டிற்கு ஏற்பட்ட ஆதாயங்களைத் தான் பார்க்க வேண்டும். இதற்கு முன் சென்ற காங்கிரஸ் பிரதமர்கள் செலவுகளையும் அன்றைய காலக் கட்டத்திற்கு ஏற்ப ஒப்பிட்டு பாருங்கள். காங்கிரஸ்காரர்கள் குடும்பத்தினர், உறவினர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் படை சூழ சென்றார்கள். தேசப் பிரதமர் அவர்களை விடுங்கள். சாதாரண மாநில முதல்வர் குழு செல்வதற்கு எவ்வளவு செலவாகிறது என்று பாருங்கள். எல்லாவற்றையும் ஒப்பிடும் போது இது ஒன்றுமல்ல என்று தோன்றும். கிடைத்த பலன்கள் பலவாக இருக்கலாம். இன்று உலகத்தில் நம் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற பெருமை நிச்சயம் நம் பிரதமருக்கு உண்டு.


Ray
மார் 22, 2025 12:58

கிடைத்த பலன்கள் பலவாக இருக்கலாம். ஆம் சில பின்தங்கிய நாடுகளின் உயர்ந்த பட்டங்களாக வாங்கி குவித்துள்ளாரே. உலகத்தில் நம் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற பெருமை நிச்சயம் நம் பிரதமருக்கு உண்டு. இந்த வாக்கியத்தில் "கடனில்" என்ற வார்த்தை மிஸ்ஸாகியிருப்பா சேர்த்துக்கனும்.


B MAADHAVAN
மார் 21, 2025 18:26

ஐயா, இதே போல காங்கிரஸ் ஆட்சியில், பிரதமர், அவரது குடும்பத்தினர், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் எல்லோரும் சேர்ந்து சென்றதனால் ஏற்பட்ட அந்தக் கால செலவுகளையும் வெளியிடுங்கள். கார்கே மட்டுமல்ல காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஏன் தான் கேள்வி கேட்டோம் என்று வருத்தப் படுவர்கள்.


மணி
மார் 21, 2025 18:18

எனத்த அரசு முறையே என்ன வேர சுத்தாத நாளே இல்ல போல அப்படி என்ன வந்தது சுத்தி சுத்தி டைம்பாஸ் அவ்வளவுதான்


அப்பாவி
மார் 21, 2025 17:39

அடேங்கப்பா... போலந்தில் ரயில் கட்டணம் ரொம்ப அதிகம் போலிருக்கு. 10 கோடிக்கு மேல் செலவாயிருக்கு.


Yes your honor
மார் 21, 2025 18:51

அதெல்லாம் சரி, உங்க அப்பா ஜப்பான் போனாரு, ஜாக்கிசான பாத்தாரு என்று ஏதேதோ உருட்டுனாரே. அந்த அக்கவுண்ட்டை எல்லாம் முதல்ல கொடுக்கச் சொல்லுயா. அப்புறமா போலந்து, பொட்டுக் கடலை எல்லாம் பேசலாம்.


Bala
மார் 21, 2025 17:38

Martin, இப்படித்தான் காமராஜர் அய்யாவையும் "குடும்பம் இல்ல அதனால் விலைவாசி தெரியல " என்று DMK பிரசாரம் செய்தனர் . 1970 மக்களும் அதை நம்பினர். இப்போ 2020. PM விசிட்க்கும் CM விசிட்க்கும் வித்தியாசம் தெரியாத ஆள் இல்ல நீங்க ஆனா உங்கள நீங்களே DMK va நம்பி ஏமாற வேண்டியதுதான்


M Ramachandran
மார் 21, 2025 17:08

இது மாதிரி ஸ்டாலினும் கொடுக்க இயலுமா? அது கேள்வி குறி தான். ஏன் என்றால் குடும்ப பட்டால மெ ஆதவன் சினிமாவில் வரு வது போல் தனியார் பஸ்சில் செல்வது போல் உல்லாச பயணம் அரசு செலவில். இதைய்ய எப்படி வெளியெ கூற முடியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை