உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்படையினருடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

கடற்படையினருடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்த தீபாவளி பண்டிகையை கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kxbhbk9r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் வரும் 20ம் தேதி கொண்டாடப்படும் இந்தாண்டுக்கான தீபாவளியை பிரதமர் மோடி கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ல் குஜராத்தின் சர் கிரீக்2023ல் ஹிமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா2022ல் கார்கில் போர் நினைவிடம்2021ல் ஜம்மு காஷ்மீரின் நௌஷெரா2020ல் ராஜஸ்தானின் லோங்கேவாலா 2019ல் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி2018ல் உத்தரகண்டின் ஹர்சிலில் உள்ள இந்தோ திபெத் படையினருடன்2017ல் ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பிரிவுடன்2016ல் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சும்டோ (இந்திய-சீன எல்லை)2015ல் பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள தோக்ராய் போர் நினைவிடம்2014ல் லடாக்கின் சியாச்சினில் கொண்டாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Narayanan Muthu
அக் 16, 2025 19:20

இந்த ஆண்டிற்கான மோடியின் சிறப்பு தீபாவளி நாடகம் கோவாவில் நடக்க இருப்பதை காண மக்கள் ஆவல். தேர்தல் வந்தால் புண்ணிய தளங்களில் ஷோ காட்டுவதும் தீபாவளி வந்தால் ராணுவ வேஷம் போட்டு ராணுவ மையங்களில் தேச பக்தியை காட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.


SUBBU,MADURAI
அக் 16, 2025 20:52

வரும் காலத்தில் நீங்க பாரத் மாதாகி ஜே என்று சொல்லக் கூடிய காலம் விரைவில் வரும் இல்லை என்றால் நீங்க உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு விரட்டியடிக்க படுவீர்கள். எனவே வாலை சுருட்டிக் கொண்டு இருங்க...


Rajasekar Jayaraman
அக் 16, 2025 15:22

கர்மயோகி.


RAMESH KUMAR R V
அக் 16, 2025 14:52

ஒட்டுமொத்த இந்தியாவே நமது பிரதமருடைய குடும்பம். வாழ்க நீடுழி .


புதிய வீடியோ