உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி

வாரணாசியில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி

வாரணாசி: வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ., சார்பில் களமிறங்கி உள்ள பிரதமர் மோடி 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2z1mapqw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று (ஜூன் 4) ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக ஓட்டுகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை தன்வசப்படுத்தினார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகம்.வாரணாசி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட்டு, பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' வெற்றிப்பெற்றதை பா.ஜ., தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளார். இன்று இரவு 7 மணியளவில் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் வரும் பிரதமர் மோடி, 3வது முறையாக ஆட்சியமைப்போம் என சூளூரைக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A1Suresh
ஜூன் 04, 2024 20:48

ஆயுஷ்மான் பவ மோடிஜி, விஜயீபவ மோடிஜி, கீர்த்திமான் பவ மோடிஜி


டேனியல்,இரட்சண்யபுரம்
ஜூன் 04, 2024 19:12

என்னதான் பிரதமர் மோடி வெற்றி பெற்றாலும் ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் அவர் பின்னடைவு என்ற மரண பயத்தை காட்டி விட்டார்கள் இந்த இத்தாலி காங்கிரஸ் கட்சியினர்...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி