உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. நடப்பாண்டிற்கான, 'ஜி - 7' நாடுகளின் உச்சி மாநாடு வட அமெரிக்க நாடான கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.https://www.youtube.com/embed/WoU2w8yGnPsபிரதமர் மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறேன்.கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன். பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது. ஒரு இந்தியப் பிரதமரின் முதல் பயணமாக இருக்கும் குரோஷியாவிற்கான எனது பயணம், இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

karthikeyan a
ஜூன் 15, 2025 13:08

லிவிங்ஸ்டன் காமெடி mind வாய்ஸ் வருவதை தவிர்க முடியவில்லை.


கண்ணன்,மேலூர்
ஜூன் 15, 2025 16:02

அறிவாலய அடிமைக்கு இன்னக்கு விடுமுறை போல...


sundarsvpr
ஜூன் 15, 2025 11:53

நம்பிக்கையுடன் செல்லும் பயணங்கள் வெற்றிகரமாய் இருக்கும். பாரத பிரதமரின் நோக்கம் ஆண்டவன் அருளால் நிறைவேறும். நாட்டுமக்களும் ஆண்டவனை பிரார்திக்கவேண்டும்


Senthoora
ஜூன் 15, 2025 13:36

முதலில் விமானவிபத்தில் இறந்தவர்களுக்கு பிரார்த்தியுங்கள், அழையா விருந்தாளியாக எதுக்கு போகணும், நாளைக்கு விமானவிபத்து Black Box அறிக்கை வருது, அங்கே போய் பிரிட்டன் நம்மாளுகளை கொன்னுட்டியே என்ற பழிச்சொல் கேட்கணுமா?


பாமரன்
ஜூன் 15, 2025 11:12

டாட்டா பைபை ஸீயோ...


vivek
ஜூன் 15, 2025 16:05

நம்ம பாமரன் சந்தோஷமா டாஸ்மாக் கிளம்பிட்டாரு போல....என்ஜாய்


பெரிய குத்தூசி
ஜூன் 15, 2025 09:45

நீங்கள் பாதுகாப்பாக சென்றுவர ஒரு தேசப்பற்றாளனாக இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜைஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை