உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., இளம் தலைவர்களுக்கு பிரதமர் புகழாரம்

காங்., இளம் தலைவர்களுக்கு பிரதமர் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, ஆக. 22- 'காங்கிரசில் இருக்கும் இளம் தலைவர்கள் திறமையானவர்கள். ஆனால், பார்லி.,யில் பேச அவர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை' என பிரதமர் மோடி விமர்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 21ம் தேதி துவங்கிய நிலையில், நேற்று முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஆப்பரேஷன் சிந்துார் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால், இரு சபைகளிலும் பெரும்பாலும் அமளியே நிலவியது. இதனால், சபை நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளையொட்டி, தே.ஜ., கூட்டணி தலைவர்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார். அப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் இளம் தலைவர்களை பிரதமர் மோடி பாராட்டி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில இளம் தலைவர்கள் திறமையானவர்கள், இதனால் தன் பதவிக்கு எங்கே பாதகம் ஏற்பட்டு விடுமோ என ராகுல் அச்சத்தில் இருப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சி த்ததாக கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்கள் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன என்றும், இருந்தாலும் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதில் தனக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் தே.ஜ., கூட்டணி தலைவர்களிடம் அவர் கூறியது தெரிய வந்துள்ளது. இந்த தேநீர் விருந்தில் கூட்டணி கட்சியினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் யாரும் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

suresh Sridharan
ஆக 22, 2025 09:53

சிலர் இங்கு பதிவிடும் போது மற்ற நியூஸ் இதையும் பார்ப்பதில்லை அவர்களுக்கு இருக்கும் ஒரே எந்திரம் பிஜேபியை குறை சொல்வது ஓட்டு திருட்டை யார் அம்பலப்படுத்தியது ராகுலா யார் அதில் மாட்டியது ராகுல் காங்கிரஸ் அதை முதலில் பார்த்துவிட்டு வாங்க காங்கிரஸ் தலைவர்களுக்கு மரியாதை இல்லை சில தற்குறிகளுக்கு மட்டும் தான் மரியாதை தற்குறி


Narayanan Muthu
ஆக 22, 2025 09:08

ஆனாலும் உங்களை போன்ற வோட்டை திருடி பதவியில் இருக்கும் திறமை அவர்களுக்கு இருக்காது.


vivek
ஆக 22, 2025 10:51

இந்த முத்து எப்பவும் சொத்தைதான்...


Mario
ஆக 22, 2025 08:55

கள்ள வோட்டு


vivek
ஆக 22, 2025 10:52

மணிப்பூர் திருட்டு....


Kasimani Baskaran
ஆக 22, 2025 06:55

வின்சிக்கு கல்தா கொடுக்க ஆலோசனை. தங்கள் கோஷ்டி மட்டுமே சாப்பிட வேண்டிய காங்கிரஸ் சொத்துக்களை வேறு யாரும் சாப்பிட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் வின்சியும், அவரது தாயும் காங்கிரசின் கடிவாளத்தை யாருக்கும் விட மாட்டார்கள்.


venugopal s
ஆக 22, 2025 06:14

இதற்குப் பெயர் தான் தூண்டில் போடுவது என்பதா?


vivek
ஆக 22, 2025 07:28

இதை ஒரு வீணா போன இருநூறு சொல்லக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை