உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.எம்., ஸ்ரீ திட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்டி

பி.எம்., ஸ்ரீ திட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : ''கேரளாவில், 'பி.எம்., ஸ்ரீ' எனப்படும், 'பிரதமரின் எழுச்சிமிகு இந்தியாவுக்கான பள்ளிகள்' திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்ததுள்ளது. இக்குழு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, இத்திட்டம் நடைமுறைக்கு வராது,'' என, மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் இ.கம்யூ., கட்சிக்கு, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர், அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர்.தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பி.எம்., ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு பள்ளிகளை தேர்வு செய்து, கல்வியின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை அமல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, மாநில அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி, பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கேரள கல்வித்துறை கையெழுத்திட்டது.கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெறவே பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்தார். எனினும் இதை கூட்டணியில் அங்கம் வகிக்கும் இ.கம்யூ., ஏற்கவில்லை. இதனால் அக்கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பின் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:பி.எம்., ஸ்ரீ திட்டத்தில், கேரள அரசு இணைவது பற்றி கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் அமைச்சர்கள் ராஜன், ராஜீவ், ரோஷி அகஸ்டின், பிரசாத், கிருஷ்ணகுட்டி, ஏ.கே.சசிதரன் ஆகிய ஏழு பேர் அடங்கிய குழு நியமிக்க அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது. இக்குழு ஆய்வு நடத்தி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை, இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இதுபற்றி கடிதம் வாயிலாக, மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

RRR
அக் 30, 2025 13:27

கேரளா மக்களுக்கு கல்வியறிவு இருந்தாலும் நல்ல புத்தி என்பது சிறிதும் இல்லை...


Anbuselvan
அக் 30, 2025 12:23

தமிழக அரசை போலவே முதலில் ஊம் சொல்லிட்டு பிறகு ஊஊம் சொல்ராங்களே


Indian
அக் 30, 2025 12:07

சூப்பர்


கண்ணன்
அக் 30, 2025 10:30

பாமர மக்கள நிறைந்த கட்சிக்கு யார் எப்படி அறிக்கை கொடுத்தாலும் புரியப் போவதில்லை- இதில் கேரளா 100% கல்வி அறிவு பெற்றுள்ளதாம்! வெறுமே மலையாளத்தல் கையெழுதுத்து போட மட்டும் தெரிந்தால் அது கல்வி அறிவா?


தலைவன்
அக் 30, 2025 11:23

வறுமையை முற்றிலும் அகற்றிய முதல் மாநிலமும் கேரளம்தான். இதுக்கும் எதாவது சொல்லுங்களேன்??


மனிதன்
அக் 30, 2025 15:27

பிறகு..., காந்திமீது பழி சுமத்தி, சாவர்கரையும், கோட்ஸேவையும் தியாகிகளாக காட்டி, நம் வரலாற்றையே காவிமயமாக்குவதையும், போலி வரலாற்றை ஏற்ப்பதும் தான் கல்வியறிவா???


Venugopal S
அக் 30, 2025 09:19

இரண்டு ரூபாய் காசுக்கு என்ன பிழைப்பு பிழைக்க வேண்டியுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இவரைப் பாராட்டி கருத்து போட்டோம், இப்போது திட்ட வேண்டியுள்ளது!


தமிழ்வேள்
அக் 30, 2025 09:17

இவரது மருமகன் ரிஸ்வானின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.


VENKATASUBRAMANIAN
அக் 30, 2025 08:14

இது மாதிரி அரசியல்வாதிகள் இருக்கும் வரை உருப்படாது. மக்கள்தான் உணரவேண்டும்.


duruvasar
அக் 30, 2025 07:51

ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஒரு துறைசார் வல்லுநர் குழு அமைத்து இந்த பணியை செவ்வனே செய்ய ஆலோசித்திருக்கலாம்.


Narayanan, Chidambaram
அக் 30, 2025 07:44

குழு தலைவர் சிவன் குட்டி. இவர் ரொம்ப பிரபலம். அசெம்பிளி மேஜை மீது ஏறி அட்டகாசம் செய்தவர். பக்கா கம்மி. பெரிதாக எதுவும் படிக்கவில்லை. வாழ்க கேரளம்.


திகழ் ஓவியன்
அக் 30, 2025 07:32

பிஎம் ஶ்ரீ திட்டத்தை நிறுத்துவது சாதனை இல்லை...வேதனை...வருத்தப் பட வேண்டியது.. நீரும் உமது சந்ததியுமே... உம்முடைய கதறல், எங்களுக்கு என்றும் ஊக்கமே... ஜெய் பாரத்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை