உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: டில்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்

ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: டில்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இன்று (ஆகஸ்ட் 17) பிரதமர் மோடி, ரூ.11,000 கோடியில் முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.டில்லி செல்லும் பிரதமர் மோடி, இன்று பிற்பகலில் ரோஹினியில் நடைபெறும் விழாவில், தேசியத் தலைநகரில் சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், டில்லி-என்சிஆர் பகுதியில் சீரான மற்றும் சிறந்த இணைப்பை ஏற்படுத்தவும் உதவும் ரூ.11,000 கோடி மதிப்பிலான் 2 திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.இந்த இரண்டு முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களில்,துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டில்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, 5.9 கி.மீ. ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரையிலும், 4.2 கி.மீ. துவாரகா செக்டார்-21 ஐ டில்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.பொதுமக்களுக்காக திறக்கப்படும் இரண்டாவது திட்டம், அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான நகர்ப்புற விரிவாக்க சாலை- பகுதி 2 ஆகும், இது பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ