உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி நாளை ஆந்திரா பயணம்; ரூ.13,430 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி நாளை ஆந்திரா பயணம்; ரூ.13,430 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ரூ.13,430 கோடி மதிப்பிலான நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க, பிரதமர் மோடி நாளை ஆந்திரா செல்கிறார்.ஆந்திரா செல்லும் பிரதமர் மோடி, நந்தையால் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு,ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையத்தை நேரில் பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து, கர்னூலுக்கு செல்லும் அவர், தொழில், மின்சாரம், சாலை, ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய, ரூ. 13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Priyan Vadanad
அக் 15, 2025 21:40

காங்கிரஸ் ஆட்சியில சொல்லாமல் செய்துகொண்டிருந்தார்கள். யார் செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் மக்கள் தங்களுக்கானது என்று அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாம் நன்றாகவே இருந்தது.


Kasimani Baskaran
அக் 16, 2025 04:07

உடன்பிறப்புகள் கதை கட்டுவதில் நிபுணர்கள்.


Priyan Vadanad
அக் 15, 2025 21:36

திட்டம்னா போதுமா? திட்டத்துக்கான பணம் எங்கேயிருந்து வரும்னு சொல்லவேண்டாமா?


V Subramanian
அக் 15, 2025 20:33

அதான் ஹிந்தி எதிர்ப்பு மசோதா தாக்கல் பன்றாங்கல்ல, இன்னும் என்ன வேணும் ??


Indian
அக் 15, 2025 20:10

தமிழ் நாட்டிற்கு ??.


vivek
அக் 15, 2025 20:32

தமிழ்நாட்டிற்கு டாஸ்மாக்...போதுமா


N Sasikumar Yadhav
அக் 15, 2025 20:49

உங்க கோபாலபுர திராவிட எஜமான் ஒட்டியிருக்கிற ஸ்டிக்கர் அனைத்தும் மத்திய மோடிஜி கொடுத்த திட்டங்கள் மீதுதான்


Vasan
அக் 15, 2025 21:12

தமிழ்நாட்டிற்கு, தமிழக பிரதமர், ஏற்கனவே வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து விட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை