மேலும் செய்திகள்
புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள்
26-Dec-2024
பெங்களூரு:
புத்தாண்டு தினத்தன்று, பி.எம்.டி.சி., - மெட்ரோ ரயில் நிர்வாகங்களுக்கு, 7.50 கோடி ரூபாய், வருவாய் கிடைத்துள்ளது.பெங்களூரில் நேற்று முன்தினம் காலையில் இருந்தே, புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கின. நகரின் முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல, பி.எம்.டி.சி., பஸ்களை மக்கள் அதிகம் பயன்படுத்தினர்.பிரிகேட் ரோடு, சர்ச் தெரு சுற்றுப்பகுதிகளில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி விட்டு, வீட்டுக்குத் திரும்புவோருக்கு வசதியாக நேற்று அதிகாலை 2:00 மணி வரை, பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டன. எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி, ஜிகனி, சர்ஜாப்பூர், கெங்கேரி, ஜனபிரியா லே - அவுட், நெலமங்களா, எலஹங்கா, பாகலுார், ஹொஸ்கோட், சன்னசந்திரா, பனசங்கரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, நேரடி பஸ்கள் இயங்கின.மெஜஸ்டிக் பஸ் நிலையம், கே.ஆர்., மார்க்கெட், சிவாஜிநகர், கோரமங்களா, காடுகோடி, கெங்கேரி, சும்மனஹள்ளி, கோரகுன்டேபாளையா, எலஹங்கா, சாந்திநகர், பனசங்கரி, ஹெப்பால், சென்ட்ரல் சில்க் போர்டு பகுதிகளில் இருந்து, பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பஸ்கள் இயக்கப்பட்டன.பி.எம்.டி.சி., பஸ்களில் 35 லட்சத்து, 80 ஆயிரத்து 472 பேர் பயணம் செய்து உள்ளனர். இதன்மூலம் 5 கோடியே 48 லட்சத்து 89 ஆயிரத்து 250 ரூபாய் வருமானம் கிடைத்தது.இதுபோல மெட்ரோ ரயில் சேவையும் அதிகாலை 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு நாளில் செல்லகட்டா - ஒயிட்பீல்டு இடையில் நேரடியாக 4,00,583 பேரும்; மாதவரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் 2,90,530 பேரும்; காகித டிக்கெட் வாங்கி 5,423 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் மெட்ரோ நிர்வாகத்துக்கு 2 கோடியே 7 லட்சம் கிடைத்துள்ளது.
26-Dec-2024