உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் அமெரிக்க பயணம் தோல்வி; வீண் விளம்பரம் என ராமதாஸ் காட்டம்

முதல்வர் அமெரிக்க பயணம் தோல்வி; வீண் விளம்பரம் என ராமதாஸ் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

18 நிறுவனங்கள்

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு; அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இது மிக மிக குறைவு ஆகும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ph27krt8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதலீடு

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவை தான். அந்த நிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான மையங்களை அமைப்பதற்காகவே முதலீடு செய்ய முன் வந்திருக்கின்றன.

தேவையில்லை

உலகில் நான்காம் தலைமுறை தொழில்புரட்சி நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய ஆய்வு மையங்கள் அமைக்கப்படுவதும், அதற்காக முதலீடு செய்யப்படுவதும் இயல்பாக நடக்கக் கூடியவை. ஒருவேளை இதற்கான முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தகவல்தொழில்நுட்ப அமைச்சரும், செயலாளரும் பேச்சு நடத்தி சாதித்திருக்கலாம். இதற்காக முதலமைச்சர் அவர்கள் தம்மை வருத்திக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கத் தேவையில்லை.

தரமான முதலீடுகள்

தெலுங்கானா முதலமைச்சராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை 8 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, ரூ.31,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். மொத்தம் 19 நிறுவனங்களுடன் தெலுங்கானா அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் அம்மாநிலத்திற்கு கிடைக்க இருப்பவை தரமான முதலீடுகள் ஆகும்.

ரூ.25,000 கோடி முதலீடுகள்

அதேபோல், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற சித்தராமையா தலைமையிலான அரசின் சார்பில் அம்மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.25,000 கோடி முதலீடுகள் ஈர்க்க உறுதி பெற்று வந்துள்ளனர்.

மதிப்பு குறைவு

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54ம் மாநாட்டின் போது மகாராஷ்டிரா முதலமைச்சர் ஷிண்டே தலைமையிலான குழு மொத்தம் ரூ.3.53 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றின் பெரும்பாலானவை அமெரிக்க முதலீடுகள் ஆகும். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது.

சாதகமான சூழல்

தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் தான். இதை செய்தால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தானாக குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அருணாசலம்
செப் 13, 2024 22:41

டாக்டர் ஐயாவுக்கு ஏதோ வேண்டுமாம். கவனிக்கவும்.


c.chandrashekar
செப் 13, 2024 20:56

கர்நாடக அரசு அமைதியாக இந்தியாவின் மிக பெரிய சயின்ஸ் சிட்டி கட்டி கொண்டு இருக்கிறது டி ஆர் டி ஓ , இஸ்ரோ , இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எல்லோரும் மிக பெரிய அளவில் வேலைகளை தொடங்கி அமைதியாக செய்து கொண்டு இறக்கிறாரகள் அது முடியும் போது அங்கு 10000 கும் அதிகமானால் விஞ்ஞானிகள் வேலை செய்வார்கள் இடம் சித்ரதுர்கா டிஸ்ட்ரிக்ட்டில் உள்ள செல்லக்கறே.


Sivagiri
செப் 13, 2024 20:18

அவரு என்ன படை எடுத்து போருக்கா போனாரு ? . . தோல்வி அடைய ? . , ஒரு கல்லை தூக்கி ஏரோபிளான்ல போட்டால் அது கூட அமெரிக்காவுக்கு போயிட்டு வந்து , போயிட்டு வந்து , இருக்கும் . . . ?


Barakat Ali
செப் 13, 2024 19:34

போனதே முதலீட்டை ஈர்க்க அல்ல ....... முதலீடு செய்யத்தான் என்று அவரது கட்சியினரே பேசுகிறார்கள் ....


Arachi
செப் 13, 2024 19:13

பாமக தனித்து நின்று போட்டியிட வேண்டும். அப்போது தெரியும் உண்மை நிலை. ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே என்ற ஒரே கொள்கைதான் இந்த கட்சியின் நிலைப்பாடு. முயற்சி பண்ணுவதில் தவறில்லை.


Murugesan
செப் 13, 2024 18:56

அவங்க மருத்துவ சிகிச்சைக்காக உலகறிய சொல்லிவிட்டு சென்றனர், திருட்டு அயோக்கிய கட்டுமர வாரிசுகள் ஊர் ஊராக குடும்பத்தோடு கூத்தடிக்க, முதலீட்டை பெற என்று சொல்லி ஊழல் பணத்தை முதலீடு செய்ய சென்ற திருட்டு சுயநல கும்பல்.


என்றும் இந்தியன்
செப் 13, 2024 16:42

18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். பரவாயில்லையே, ஸ்டாலின் கமிஷன் பணம் ரூ 6000 கோடி எடுத்துக்கொண்டு போய் லுலுவிடம் கொடுத்துவிட்டு லூலூ மால் டாஸ்மாக்கினாட்டில் வருவது போல மற்றவர்களுக்குத்தெரிந்தது. இது அத்தனையும் ஸ்டாலின் பணம். அதைப்போலத்தான் இதுவும், என்ன இந்த தடவை ரூ 1616 அதிகம் இந்த முதலீட்டாளர்கள் என்று soலிக்கொள்பவர்கள் யார் சென்னையில் ஏற்கனவே industry வைத்து நடத்துபவர்கள் ஆனால் யாருடைய முதலீடு ஸ்டாலின் முதலீடு??எங்கேஇருந்து வரும்??????அமெரிக்காவிலிருந்து????


Dharmavaan
செப் 13, 2024 16:32

பயணம் உதலீட்டை ஈர்க்க அல்ல தன கருப்பு பணத்தை அங்கு முதலீடு செய்ய மக்கள் வரிப்பணத்தில் உல்லாச பயனம்


mugundh
செப் 13, 2024 16:31

முந்தைய அண்ணா தி. மு. க. ஆட்சில வெளி நாட்டுக்கு போனது எல்லாமே வெற்றியா? ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வருதுனு சொன்னாங்களே அது என்ன ஆச்சு?


Neutrallite
செப் 13, 2024 17:55

மின் கட்டணத்தை ஏற்றும் போது மட்டும் பக்கத்துக்கு மாநிலத்தை விட குறைவு ங்குறீங்க....இப்போ மட்டும் பழைய ஆட்சி ஒப்பீடு?


அப்பாவி
செப் 13, 2024 16:28

மரம் வெட்டி ரோடில் போட்டாத்தான் வெற்றி.