உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசால் மட்டும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது: ம.பி., டி.ஜி.பி.,

போலீசால் மட்டும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது: ம.பி., டி.ஜி.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: '' மொபைல்போன் மற்றும் இணைய சேவை பயன்பாடு அதிகரிப்பால், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசாரால் மட்டும் அதனை தடுக்க முடியாது,'' என ம.பி., மாநில போலீஸ் டி.ஜி.பி., கூறியுள்ளார்.பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு டி.ஜி.பி., கைலாஷ் மக்வானா கூறியதாவது: இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனது எண்ணப்படி, இணைய சேவை, மொபைல்போன் பயன்பாடு, ஆபாச படங்கள், மதுபானம் எளிதாக கிடைப்பதும் காரணம். எங்கிருந்தாலும் மொபைல்போன் மூலம், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதும் காரணம். சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருகிறது. இவை அனைத்தும் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகிறது.இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்கள், இளம் வயதில் இளைஞர்களின் மனதிற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் மற்றொரு காரணம் ஆகும். எனவே, சம்பவங்களை போலீசார் மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சாத்தியம் இல்லாதது.வீடுகளிலும், ஒருவர் பேச்சை மற்றவர் கேட்பது கிடையாது. குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பேச்சை கேட்க மறுக்கிறார்கள். அப்போது அவமானம் மற்றும் மரியாதை என்ற உணர்வு இருந்தது. ஆனால், அவை இப்போது மறைந்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 29, 2025 20:04

ஆனால் போலீசால் மட்டும்தான் காவல்நிலைய மர்ம மரணங்கள் தடுக்கப்பட வேண்டும். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு. இதுபோன்று காவல்நிலைய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு நீங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள்?


Murugan C
ஜூன் 29, 2025 17:27

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 17:01

உண்மையைத்தான் கூறுகிறார். ஆனால் போலீஸ் என்ன தூங்குகிறதா என்றுதான் கேட்பார்கள். தண்டிக்கப்படுபவர்கள் சதவீதம் உயர்ந்தால் மட்டுமே குற்றம் புரிய அஞ்சுவர்.


சமீபத்திய செய்தி