உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்; போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள்

கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்; போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள்

ஷம்பு : ஹரியானா - பஞ்சாப் எல்லையான ஷம்புவில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில், எட்டு விவசாயிகள் காயமடைந்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப் படும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதை முன்வைத்து, 'டில்லி சலோ' அதாவது, 'டில்லி செல்வோம்' என்ற போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லையான ஷம்புவில், விவசாயிகள் மீண்டும் துவக்கி உள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து, டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி, ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் செல்ல முயன்றனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக விவசாயிகள் கைவிட்டனர்.இந்நிலையில், ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மீண்டும் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் - போலீசார் இடையே மோதல் வெடித்தது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றனர். இதனால், விவசாயிகள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த மோதலில் எட்டு விவசாயிகள் காயமடைந்தனர். இதனால், ஷம்பு எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதன்பின், பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், ''அமைதியாக போராடிய எங்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ''இதில், எட்டு விவசாயிகள் காயமடைந்தனர். எங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SP
டிச 09, 2024 15:09

இவர்கள் விவசாயிகளே இல்லை.இவர்களையும் இவர்களை தூண்டிவிடுபவர்களையும், கண்காணித்து இரும்புகர நடவடிக்கை அவசியம் தேவை. இவர்களிடம் பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தக்கூடாது.


RAMAKRISHNAN NATESAN
டிச 09, 2024 11:03

ஒரு இருநூறு பாஜக தொண்டர்களை பத்து நாளைக்கு தொடர்ந்து சென்னா மசாலா சாப்பிட வெச்சு அங்கே அனுப்பிப் பார்க்கலாம் ....


Barakat Ali
டிச 09, 2024 09:29

குளிர்கால கூட்டத் தொடர் நேரத்தில்தான் தில்லிக்கு வர முயல்வார்கள் .... இதைச் சமாளிக்க பாஜவுக்குத் துப்பில்லை .... வக்கில்லை ....


ghee
டிச 09, 2024 10:08

வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் உனக்கு இந்தியா பற்றி பேச அருகதை இல்லை


Yes your honor
டிச 09, 2024 10:19

உண்மையான கோரிக்கைகள் என்றாலோ அல்லது போராட்டத்தின் நோக்கம் உண்மையானது என்றாலோ நிச்சயமாக தீர்வு கிடைக்கும். இந்தப் போராட்டம் கைக்கூலிகளால் உருவாக்கப்பட்டுள்ள போராட்டம். கண்ணீர்ப்புகை எல்லாம் போதாது, வெண்ணீர்புகை தான் பாடம் கற்பிக்கும். இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய நாட்டிற்கு ஒரு துன்பம் என்பதை உன்னால் எப்படி ரசிக்க முடிகிறது. மனசாட்சியே இல்லாத நீ பிறந்ததே நம்நாட்டிற்கு வேஸ்ட்.


Kalyanaraman
டிச 09, 2024 08:31

சபாஷ். இது மட்டுமன்றி உள்நாட்டில் இதற்குப் பின்னணியில் உள்ளவர்களையும் "கவனித்தால்" சரியாகிவிடும்.


சுலைமான்
டிச 09, 2024 07:45

நீங்கள்லாம் விவசாயிகளா? விவசாயினா எதுக்குடா முகத்த மூடுறீங்க? தீவிரவாதிகள்தான் முகத்த மூடிட்டு இருப்பானுங்க


சம்பா
டிச 09, 2024 06:13

விவசாய சங்கம் என்றால் நாராயணசாமி நாயுடு உடன் முடிந்துவிட்டது. தமிழகத்தில்


Kalaiselvan Periasamy
டிச 09, 2024 05:49

இந்த விவசாயிகள் புதினறி செயல் படுகின்றனரோ ? மட்டமான எதிர்கட்சி அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி இவர்கள் இவர்கள் தரத்தை தாழ்த்தி கொள்கிறார்கள் என்பதே உண்மை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை