உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ஸ்பெக்டர் இல்லாத போலீஸ் நிலையங்கள் 

இன்ஸ்பெக்டர் இல்லாத போலீஸ் நிலையங்கள் 

பெங்களூரு: இந்தியாவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே சமயம், போக்குவரத்து பாதிப்புகளும், குற்றச் செயல்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நகரம் வளர்ச்சியடையும் அதே வேகத்தில் குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.குற்றச்செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு போலீசாரின் பங்கு இன்றியமையாதது. இது போன்ற நிலையில், பெங்களூரில் உள்ள, சோழதேவனஹள்ளி, கங்கம்மனகுடி ஆகிய போலீஸ் நிலையங்களில் மாதக் கணக்காக இன்ஸ்பெக்டர்கள் இல்லை என்பது வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது.கங்கம்மனகுடி இன்ஸ்பெக்டர் சித்தேகவுடா ஓய்வு பெற்று ஆறு மாதங்களும்; சோழதேவனஹள்ளி இன்ஸ்பெக்டர் ஹரியப்பா ஓய்வு பெற்று மூன்று மாதங்களும் ஆகிறது. இத்தனை மாதங்கள் ஆகியும், இரு போலீஸ் நிலையங்களிலும் இன்னும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை