உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தியடைவதில்லை: ஷிண்டேவை சாடிய நிதின் கட்கரி!

பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தியடைவதில்லை: ஷிண்டேவை சாடிய நிதின் கட்கரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், 'பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதில்லை' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, 10 நாட்களாக நிலவி வந்த இழுபறி தொடர்கிறது. தற்போதைய முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே நிதி, வருவாய், உள்துறை இலாக்கா கட்டாயம் வேண்டும் என அடம்பிடிக்கிறார். பட்னவிஸ்சை முதல்வர் ஆக்க பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில், மஹாராஷ்டிரா மாநிலம், நாகபுரியில் புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: அரசியல் என்பது தனக்கு கிடைத்த பதவியில் திருப்தி அடையாதவர்கள் நிறைந்த கடல் போல் உள்ளது. ஒருவர் அரசியலுக்கு வந்து கவுன்சிலர் ஆகிவிட்டால், அடுத்து எம்.எல்.ஏ., ஆக ஆசைப்படுகிறார். இதையடுத்து அவர் அமைச்சர் பதவி வேண்டும் என விரும்புகிறார். அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் வருத்தப்படுகிறார்.பின்னர் அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால், நல்ல துறை கிடைக்கவில்லை என்று விரக்தி அடைகிறார். அப்படி நல்ல துறை கிடைத்துவிட்டால், அடுத்து முதல்வராக வேண்டும் என்று ஏக்கம் வந்துவிடுகிறது. முதல்வர் ஆக இருப்பவர்களும் நிம்மதியாக இருப்பதில்லை. கட்சி தலைமை எப்போது வேண்டுமானாலும் தன்னை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சத்திலேயே இருக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கும் சூழலில், நிதின் கட்கரி பேசியது முக்கியத்துவம் பெற்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Balasubramanian
டிச 03, 2024 12:28

பதவிக்காக உத்தவ் காங்கிரஸை நாடி கால் நூற்றாண்டு கூட்டணியை உடைத்தார் முதல் மந்திரியாக இருந்தும் கட்சி நலனுக்காக பாஜக பட்னாவிஸ் விட்டு கொடுத்தார் அதே பதவிக்காக ஷிண்டே இப்போது போடுகிறார் சண்டே! அது கிட்டவில்லை என்றால் உத்தவ் முன் தலை குனிய வேண்டி வருமே என்கிற கவலை அவருக்கு! சிவசேனா கட்சி என்பது மும்பை தானே புணே வரை மட்டுமே (நம்மூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாதிரி) செல்வாக்கு பெற்ற கட்சி என்பதை அவர்களே ஏற்க மறுக்கிறார்கள்


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 11:22

என் வாதத்திற்கு எதிர் இல்லாததால் என்னை விமர்சிக்கிறார்கள். இதுவே ஒரு வெற்றி தான்.


ghee
டிச 03, 2024 12:43

ஓ அது வாதமா சார்...நாங்க ஏதோ சோகுனு நனைசிடோம்....


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 11:21

என்ன பிரச்சனை உமக்கு?


Anantharaman Srinivasan
டிச 03, 2024 11:12

இவருக்கு நிதின் கட்கரி பிரதமர் பதவி மீது ஒரு கண் உண்டு. ஆசையில்லாத மாதிரி பேசுகிறார்.


ஆரூர் ரங்
டிச 03, 2024 11:06

இதே RSS காரர் நானாஜி தேஷ்முக்குக்கு 1977 இல் மொரார்ஜி தேசாய் மத்திய கேபினட் அமைச்சர் பதவியை அளித்தார். ஆனால் தனக்கு வயதாகி விட்டது. இளையவர் களுக்கு பதவி கொடுங்கள் என்று கூறிவிட்டு சமூகசேவை செய்யச் சென்று விட்டார். அவரும் மஹாராஷ்டிராகாரர்தான். மேலும் நாட்டுக்கே கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி மெட்ராஸ் மாகாணத்தில் அரசியல் குழப்பமான சூழ்நிலை இருந்ததால் கட்சியின் அழுத்தத்துக்கு இணங்க தன்னிலையிலிருந்து இறங்கி வந்து முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர்தான் சென்னை தமிழகத்துடன் இணைய காரணமாக இருந்தார். எல்லோருமே பதவியாசை பிடித்தவர்கள் என பொத்தம்பொதுவாக கூறக்கூடாது


Sathyanarayanan Sathyasekaren
டிச 04, 2024 05:04

ஆரூர் அவர்களே, தங்கள் சொன்னது அந்தக்காலம். இப்போது தகுதி, வாய்ப்பு இல்லாவிட்டாலும் 10 MLA உள்ள கட்சி தலைவர்கள் கூட ஆக ஆசைப்படுகிறார்கள். முன்பு குறைந்த தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் குமாரசாமி, நிதிஷ் குமார், போன்றோர் முதல்வர் பதவியை அவரலாது உடன்படிக்கை காலம் முடிந்தாலும் விலக மறுத்துவிட்டனர்.


Vijay
டிச 03, 2024 10:25

அருமை...


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 10:14

மகாராஷ்டிரா வில் பாஜக ஏன் கூட்டணி அமைத்தது? பதவிக்காக. ஆட்சியைப் பிடிப்பதற்காகத் தானே? நீங்கள். 3 ஆவது முறையும் அமைச்சர் பதவியில் இருக்கிறீர்கள்.


ghee
டிச 03, 2024 10:50

திராவிட குடும்ப சொம்பு கருத்து சொல்றாரு


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 10:13

மகாராஷ்டிராவில் பாஜக ஏன் கூட்டணி அமைத்தது? பதவிக்காக. ஆட்சியைப் பிடிப்பதற்காகத் தானே? தேர்தலுக்கு முன் சொன்ன 15 லட்சம் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்ட போது, Timesnow TV பேட்டியில், அது தேர்தல் ஜூம்லா என்று அமித்ஷா சொன்ன போது சிரித்தவர் தானே நீங்கள். 3 ஆவது முறையும் அமைச்சர் பதவியில் இருக்கிறீர்கள்.


ghee
டிச 03, 2024 10:52

புருடா, பாஞ்ச லட்சம் தரேன்னு உன்கிட்டே யாரு சொன்னா.... ஒன்னும் தெரியாம பொய் கருத்து போடு


KumaR
டிச 03, 2024 12:47

நீங்க நீட் எக்ஸாம் ரத்து பண்ணி கிழிச்சிட்டீங்க.. ரெண்டு ஏக்கர் நிலம் இன்னும் குடுக்க வக்கு இல்லாத விளங்காத திராவிட மாடல்


Indian
டிச 03, 2024 09:58

ஏன் ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் சொல்லணும் , மொத்த அரசியல் வாதிகளும் அப்படி தான்


Barakat Ali
டிச 03, 2024 09:51

ஆக்சுவலா நீங்க ஷிண்டேயைச் சொல்றீங்களா அல்லது மூணாவது தடவையா பிரதமர் ஆகியிருக்காரே .... அவரைச் சொல்றீங்களா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை