உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.500 லஞ்சம் தரமாட்டியா...? பாஸ்போர்ட் பக்கத்தை டர்ரென கிழித்த போஸ்ட்மேன்

ரூ.500 லஞ்சம் தரமாட்டியா...? பாஸ்போர்ட் பக்கத்தை டர்ரென கிழித்த போஸ்ட்மேன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் தர மறுத்ததால் இளைஞரின் பாஸ்போர்ட்டை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.லக்னோவில் உள்ள ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. அந்த பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்டவருக்கு தர அங்குள்ள தபால்காரர் ரூ.500 லஞ்சமாக கேட்டார். பணத்தை தர அவர் மறுத்ததால் தபால்காரர் கோபம் கொண்டு பாஸ்போர்ட்டில் உள்ள முக்கிய பக்கம் ஒன்றை கிழித்துள்ளார்.லஞ்சம் தர மறுத்து பாஸ்போர்ட் பக்கத்தை கிழித்ததால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர் இதுகுறித்த அங்குள்ள சிலருடன் சென்று தபால்காரரிடம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்டவருடன் வந்த சிலர், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர். ஊரில் தபால் வரும் போது அதை ஒவ்வொருவருக்கும் தர இதே தபால்காரர் 100 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார் என்பது ஊர்மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.பாஸ்போர்ட் பக்கத்தை தபால்காரர் கிழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வீடியோவை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

JENEFA GOSPEL Ministry
அக் 27, 2024 17:52

திருந்தாத ஜென்மங்கள் இதெல்லாம் வாங்கியே பழகிட்டானுக இவனுகல்லாம் திருந்தவே மாட்டாங்க. கம்பி என்னும்போதுதான் புத்தி வரும் சீக்கிரமா கையில காப்பு மாட்டி காவல்ல போடுவாங்க நிசசயம்


JENEFA GOSPEL Ministry
அக் 27, 2024 17:48

இவனுக்கெல்லாம் வாங்கியே பழக்கப்பட்டு போச்சு வாங்கின கையி நிக்குமா அது நீளத்தான் செய்யும் அப்பறமா கடைசிநேரத்தில அதாவது பணிஓய்வு நேரத்துல அந்த வாங்கின கையில இரும்பு காப்பு போட்டு மூஞ்சில முக்காடு போட்டு இழுத்துட்டு போட்டு மாமியார் வூட்டுக்கு கொண்டுபோவாங்கிறதே தெரியாத பேக்குப் பைய.


gayathri
அக் 25, 2024 12:40

திருடர்கள் தானே திருந்த vendum.


JENEFA GOSPEL Ministry
அக் 27, 2024 17:53

எங்கத்திருந்த ரொம்ப கஷ்டமையா


Nallavan
அக் 24, 2024 13:46

தி மு க வை திட்டதா தட்டு வருமானம் போன சாமிஜிக்கு தூக்கம் வருவது கடினம்


RAJMOHAN
அக் 25, 2024 22:40

உபி ல ஏன் தி மு க வருது ?


Mohan
அக் 22, 2024 14:28

Kodikanakil building kattuvathaha, road poduvathilum comision, lancham itha mootha vidio eduthu podugappa


S Manikandan
அக் 22, 2024 13:29

உங்களின் யார் லஞ்சம் கொடுக்க வில்லையோ வாங்க வில்லையோ அவர்கள் இதை பற்றி பேசுங்கள். எவனும் இங்கே உத்தமன் இல்லை


Sheik Nawfal
அக் 22, 2024 08:40

உ.பி.மாடல், மோடி Model


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 24, 2024 16:23

வெங்காயமாடல் , ட்ராவிடமாடல் தான் கேள்விப்பட்டு இருக்கோம். அதை தாங்கி பிடிப்பது உதவாக்கரை அமைதிக்கு பங்கம் வைப்பவர்கள். இது உலகுக்கே தெரியுமே அப்படியே பிரசுரிக்கவும்


RAMESH
அக் 22, 2024 08:11

குவாட்டருக்கு பத்து ரூபா.... நம்ம திராவிட மாடல்...


Venkatesh
அக் 22, 2024 07:40

அட வெக்கங்கெட்ட ஊ பி..... கொஞ்சம் கூட கூச்சமே இல்லை உனக்கெல்லாம்........ இது சரியில்லை தான்...... ஆனால் இங்கே நடக்கும் அநியாய அக்கிரமங்களை பார்த்தும் உன் வாய் மூடிக்கொண்டு உள்ளதே..... ஒரு வேலை செய்ய மட்டும்தான் வாயை பயன்படுத்தி பிழைப்பு


Mohan
அக் 22, 2024 14:23

Bulding, road, poduvathaga chooli kodi kanakkil commision adikirargal intha govermenttil enga parthalum commision lancham athai vidio eduthu podugal


Deljin
அக் 21, 2024 16:30

இந்தியாவில் மட்டுமே அரசு அதிகாரிகள் கடமையை செய்ய கூட லஞ்சம் வாங்குகிறாற்கள் . பாஸ்போர்ட் பெறுவதற்க்காக காவல்துறை மற்றும் அஞ்சல் ஊழியர்கள் உரிமை பணம் போன்று கேட்டு பெற்று கொள்கின்றனர் என் நண்பனுக்காக வெரிஃபிகேஷன் சென்ற போது 1000 கேட்டு 500 கொடுத்த போது 1000 குடுத்தால் தான் அனுப்ப முடியும் என மிரட்டி 1000 வாங்கி கொண்டனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை