உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு

பெங்களூரு : பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விபரம் நாளை வெளியிடப்பட இருக்கிறது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவில் தன் வீட்டில் பணியாற்றி வந்த, 47 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m8pf22pg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கஜானன் பட் அறிவித்திருந்தார். போதிய தொழில்நுட்ப தகவல் கிடைக்காத நிலையில், இன்றைய தினத்திற்கு (ஆக.,1) தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா, நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

hasan kuthoos
ஆக 01, 2025 17:18

பெரும்பாலும் மாதிரி சமாச்சாரம் எல்லாம் பி ஜே பி ஆட்கள் தான் செய்வார்கள் ,இப்போ கூட்டணி கட்சிக்காரர்களும் அதே மாதிரி ,


hasan kuthoos
ஆக 01, 2025 16:12

பஞ்சாயத்துக்கு 1000 அபராதம் கட்டிட்டு போயிடு


vee srikanth
ஆக 01, 2025 16:07

தேவ கவுடா என்ன சொல்லுகிறார் ?


JaiRam
ஆக 01, 2025 15:49

தேச துரோகி நேரூ மௌண்ட்பேட்டன் மனைவி உறவு போல்


தத்வமசி
ஆக 01, 2025 14:59

நாற்பத்து ஏழு வயது பெண்ணை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுவும் விசாரணை வேக வேகமாக நகருகிறது. விரைவான தீர்ப்பு நன்று என்றாலும் இதே வேகத்தை ஊழல் வழக்கில் சிக்கும் புனிதர்களுக்கும் செய்யலாமே. அதுவும் பிஜேபி மற்றும் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வேகம் வேகமாகவும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி தோழர்களின் விஷயத்தில் தாராளமாக மெல்ல, மெல்ல விசாரணை, வாய்தா, வாய்தா, தீர்ப்பு, தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு தண்டனை அனுபவிக்கும் காலத்தில் ஜாமீன், மருத்துவ விடுமுறை, ஏன் மந்திரியாகவும் வாய்ப்பு என்றெல்லாம் வாரி வழங்குவது ஏதோ நெருடலாக இருக்கிறது.


Tamilan
ஆக 01, 2025 14:55

பாஜாவின் கூட்டாளிகள்


Yaro Oruvan
ஆக 01, 2025 15:13

அடேய் அடடேயி .. அவனுவ எல்லா கட்சியும் கூட்டணி வச்சிக்கிட்டு இருந்தானுவ.. தேவகவுடா அமைச்சரவைல தீயமுகக்காரனுவ மந்திரியா இருக்கலியா ?? தப்பு செஞ்சிருக்கான் தண்டனை.. அம்புட்டுதான்.. உன்னோட தொலைவனுவ மாதிரி இணைவு துணைவி மனைவின்னு சந்துல இந்து பாடி எஸ்கேப் ஆகல.. போயி 200 வாங்கீரு இல்லன்னா அதையும் ஆட்டைய போற்றுவானுவ


Raman
ஆக 01, 2025 15:16

OPs this day quota