உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி; டிஆர்டிஓ புதிய சாதனை

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி; டிஆர்டிஓ புதிய சாதனை

புதுடில்லி: பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சாதனை படைத்துள்ளது.ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் ('PRALAY') ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான விமான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி, டிஆர்டிஓ சாதனை படைத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h26l7q33&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரளய் ஏவுகணை (PRALAY) என்பது போர்க்கள பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பல மேம்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள் என்னென்ன?* 150 முதல் 500 கிமீ வரை சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.* இந்த ஏவுகணை 350 முதல் 700 கிலோகிராம் எடை கொண்டது. எதிரி இலக்குகளை வீரியமாக தாக்கும் சக்தி உடையது.* இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது பாதுகாப்பு துறைக்கு மிக முக்கிய மைல்கல் என கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூலை 30, 2025 04:12

டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். அதி சக்தி மிக்க மெகா வாட் லேசர் வான் பாதுகாப்பு அவசியம். அதில் கவனம் செலுத்தினால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை.


Ramesh Sargam
ஜூலை 29, 2025 20:22

டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கும் மேலும் இந்த ஏவுகணை சோதனையை வெற்றியடையச்செய்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Nagarajan D
ஜூலை 29, 2025 18:12

பாரத தேசம் இப்போது பாதுகாப்பாக உள்ளது மீண்டும் காந்திகளையும் நேருகளையும் ஆட்சியில் அமர்த்திவிடாமல் இருந்தால் 2047 ஆண்டு கண்டிப்பாக பாரதம் வல்லரசாக இருக்கும்...


Vijayakumar Vijay
ஜூலை 30, 2025 11:33

போற போக்குல ....உனக்கு சாப்பாட்டு இறஙகாதே


Sutharsan
ஜூலை 29, 2025 17:59

பெயரே அசத்தலாக உள்ளது


என்றும் இந்தியன்
ஜூலை 29, 2025 17:48

என்ன பேரு பிறளய் என்று தெரியுமா??? ஒரு பிரளயம் பூகம்பம் நடக்கப்போகின்றது போது பாகிஸ்தான், சீன, அமேரிக்கா..... எல்லாவற்றிர்க்கும் இப்படி எல்லாம் இந்தியா ஏவுகணை செய்தால் ஐயோ எங்களை கூட தாக்க முடியுமே என்று ஒப்பாரி வைக்கப்போகின்றது வேறு விதங்களில்??இந்திய செய்வது சரியில்லை அப்படி இப்படி என்று. வாழ்த்துக்கள் டிஆர்டிஓ


பா மாதவன்
ஜூலை 29, 2025 15:44

மிக்க மகிழ்ச்சி . நம் பாரதம் மேலும் பல சாதனைகள் புரிந்து சிறந்த வல்லரசாக திகழ நல்வாழ்த்துக்கள் . ஆய்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்கள் .


புதிய வீடியோ