உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்!

காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை ரத்து செய்யக்கோரி, தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைதுவக்கி உள்ளார்.பீஹார் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் , அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய டிச.,13ல் மாநிலம் முழுவதும் தேர்வு நடந்தது. இதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. வினாத்தாள் கசிந்தது என தேர்வர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது.தேர்வர்கள் கூறியபடி, இந்தத்தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் அரசுக்கு 48 மணி நேரம் பிரசாந்த் கிஷோர் கெடு விதித்து இருந்தார். ஆனால் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை.இந்நிலையில், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.அப்போது அவர் கூறியதாவது: டிச.,13ல் நடந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்பது எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய தேர்வை, விற்பனை செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஜன 03, 2025 01:28

பிஹாரில் பிரஷாந்த் கிஷோர் வெற்றிபெற வாழ்த்துக்கள். தொடரும் லாலு மற்றும் நிதிஷ் ஆட்சியால், செல்வ கொழுப்பாக இருந்த பீகார் பட்டினி பிஹார் ஆகிவிட்டது. கிஷோர் தான் காப்பாற்றமுடியும்.


BalaG
ஜன 02, 2025 23:52

சாரை அவர் விருப்பப்படியே இருக்க விடுங்க. யாரும் தொந்தரவு செய்யாதீங்க


spr
ஜன 02, 2025 22:50

சாகும் அரை உண்ணாவிரதம். சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இவையெல்லாமே மஹாத்மாவிற்குப் பிறகு கேலிக்கூத்தாகப் போய்விட்டது ஏகாதசி விரதமிருப்பவன் கூட எள்ளி நகையாடுகிறான் இதைவிட மக்களிடம் பிரச்சினை என்ன என்று சொல்லலாம் சவுக்கடிப் போராட்டம் நடத்துவதைவிட நிரூபங்களுடன் நீதிமன்றம் செல்லலாம்.சவுக்கு சங்கர், ரங்கராஜ் பாண்டே இவர்கள் கூட மக்களை ஈர்க்கும் வகையில் பேசுகிறார்கள் அண்ணாமலை கிஷோர் போன்றோருக்கு பேசத் தெரியவில்லையா


Rajamani K
ஜன 02, 2025 21:55

News Prashant Kishor announces fast unto death to press demand for BPSC exam cancellation. I feel it is better for him to fast, for the SIN he did to Tamil Nadu by helping to bring DMK Government, by ging a fees for it. He now tries to become another Kejriwal.


அப்பாவி
ஜன 02, 2025 20:41

சாட்டையால் அடிச்சுக்கலாமே...


ghee
ஜன 02, 2025 22:13

பீகார் ல கூட பாஞ்ச லட்சம் கெளு கோவாலா


MUTHU
ஜன 02, 2025 20:22

ஒரு கருமம் தொலைந்தது.


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 02, 2025 20:19

ஊருக்கு எல்லாம் சொல்லுமாம் பல்லி கழனி பானையில் விழுந்ததாம் துள்ளி , பிஜேபி பி டீம், நம்ம ஊர் சீமான் இவர்.


Venugopal S
ஜன 03, 2025 07:43

உன் daleevaru மறுபடி பதவிக்கு வந்ததே இந்த ஆரியன் மூலமே...படிக்கிறது 21 ஆம் பக்கம், போறது கோவில் கோவிலா. பீகார் ஒண்ணும் மாடல் ஆட்சி அல்ல உன்ன மாதிரி 200 ரூவாக்கு கூவ


Anu Sekhar
ஜன 02, 2025 20:16

Do something constructive. Waste of time and money


Anantharaman Srinivasan
ஜன 02, 2025 20:11

ஊருக்கெல்லாம் ஐடியா தந்தவர் ஜம்பம் உள்ளூரில் விலைபோகாத விநோதம்..


தமிழ்வேள்
ஜன 02, 2025 19:56

இவர் திமுகவுக்கு ஐடியா கொடுக்க போக அது உல்டா ஆகி, இப்போது இவரே கருப்பு சட்டை மாட்டி திமுக உ.பி ஆக மாறி விட்டாரே... ஒருக்கால் திமுகவின் பிஹார் மாநில கிளையா இவருடையது?


முக்கிய வீடியோ