காங்கிரசில் சேர மாட்டேன் பிரதாப் சிம்ஹா ஆவேசம்
மைசூரு: பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, மைசூரில் நேற்று அளித்த பேட்டி:காங்கிரசுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம், எனக்கு இருந்தால் லோக்சபா தேர்தலின் போதே சென்றிருப்பேன். சீட் கொடுக்கிறோம், வாருங்கள் என, பலரும் என்னை காங்கிரசுக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.வருணாவில் சித்தராமையாவுக்கு எதிராக பணியாற்றியவன் நான். அவர், என் மீது பல வழக்குகளை போட்டவர். இப்போதும் வழக்குகள் உள்ளன. நான் நேர்மையான நபர். காங்கிரசில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கட்சியின் சிலர் என்னை விமர்சித்தனர். பேச்சு நாகரிகம் மீறக்கூடாது.பிரின்சஸ் சாலை என்ற ஆவணங்கள் இருந்தால், அதை மாற்ற வேண்டாம். முதல்வர் சித்தராமையாவின் பெயரை, வேறு சாலைக்கு வைக்கட்டும். நான் இது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடாவிடம் வேண்டுகோள் விடுப்பேன். புதிய லே - அவுட்டுக்கு, முதல்வரின் பெயர் வைக்கட்டும். இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.