மேலும் செய்திகள்
போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி
15-May-2025
ஜெய்ப்பூர: ராஜஸ்தானில், அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு, தவறுதலாக மாற்றுவகை ரத்தம் செலுத்தப்பட்டதால், அவர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சாய்னா, 23, என்ற கர்ப்பிணிக்கு, ஹீமோகுளோபின் குறைவு, காசநோய் அறிகுறி மற்றும் சில உடல்நல குறைபாடுகள் இருந்தன. இதையடுத்து, அங்குள்ள சவாய் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், சாய்னாவுக்கு கூடுதல் ரத்தம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் இயங்கும் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் பெறப்பட்டு, அவருக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சாய்னாவிற்கு காய்ச்சல் அதிகரித்தது. இதய துடிப்பும் அதிகரித்தது. அதிக அளவில் ரத்த போக்கும் ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அச்சமடைந்தனர். உடனே, அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்று டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும், அவர் உயிரிழந்தார்.சாய்னாவின் ரத்த வகையான 'ஏ' பாசிட்டிவுக்கு பதிலாக, 'பி' பாசிட்டிவ் ரத்த வகை செலுத்தப்பட்டதால், அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், இக்குற்றச்சாட்டை சாய்னாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மறுத்தனர்.ஏற்கனவே, பல்வேறு உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை காப்பாற்ற முடியவில்லை என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-May-2025