உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்: 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!

காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்: 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி உள்ளார்.சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் ரவி காலம் தாழ்த்துவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ''மசோதாவை கவர்னர்கள் அனுப்பி வைத்தால், அதன் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்' என, கால நிர்ணயம் செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qx02boor&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மசோதா விஷயத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு, உச்ச நீதிமன்றம் இது போல் காலக்கெடு நிர்ணயித்தது, இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தொடர்பாக, இன்று (மே 15) உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பினார். 1. ஒரு சட்ட மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?2. அவ்வாறு மசோதா கவர்னர் இடம் சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?3. அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?4. அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு தடையாக உள்ளதா?5. அரசியல் சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?6. அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின் படி, ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா?7. அரசியல் சட்டத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?8. ஒரு கவர்னர் தனக்கு வந்த மசோதாவை ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது, ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பான அரசியல் சட்ட விதிமுறைகள் குறித்து, ஜனாதிபதி 143வது சட்ட பிரிவின் படி உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்க வேண்டுமா?9. அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரும், 201வது பிரிவின் படி ஜனாதிபதியும் எடுக்கும் முடிவுகள் சட்டம் ஆவதற்கு முன் ஏற்றுக்கொள்ளக் கூடியவையா? அந்த சட்டம் அமல் செய்வதற்கு முன்னதாகவே, நீதிமன்றங்கள் அவற்றின் பொருள் தொடர்பான விசாரணைகளை நடத்தலாமா?10. கவர்னர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவுகளை, அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின்படி வேறு வகையில் பிறப்பிக்க முடியுமா?11. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னர் ஒப்புதல் தராமலேயே அமலுக்கு கொண்டு வர முடியுமா? 12. உச்சநீதிமன்றத்தின் ஒரு பெஞ்ச் தனக்கு முன் வந்துள்ள ஒரு வழக்கில், அரசியல் சட்டத்தின் 145 (3)ன் படி, அரசியல் சட்டம் தொடர்பான பல விதமான கேள்விகள் எழும்போது, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?13. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் படி, உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்திற்கு மட்டும் உட்பட்டவையா அல்லது அமலில் இருக்கும் அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?14. மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான விவகாரத்தில், அரசியல் சட்டத்தின் 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர, உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகார வரம்பை ஏதாவது வகையில், அரசியல் சட்டம் தடுக்கிறதா?இவ்வாறு 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பிய விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கால நிர்ணயம் செய்திருப்பதற்கு ஜனாதிபதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.,வின் தூண்டுதலின் பேரில் கவர்னர் செயல்பட்டார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. உச்சநீதிமன்றத்திற்கு சவால் விடுவதா? ஜனாதிபதி விளக்கம் கேட்டிருப்பது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை வலுவிழக்கச்செய்யும் முயற்சி உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்த பிரச்னையை மீண்டும் தூண்டுவது கண்டனத்துக்குரியது. பா.ஜ., ஆளாத மாநில அரசுகளை முடக்க நினைக்கிறதா மத்திய அரசு? அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி இந்த பிரச்னையை எதிர்கொள்வோம். ஜனாதிபதியின் செயல் நேரடியாக மாநில அரசின் தன்னாட்சிக்கு சவால் விடுவதாக உள்ளது. பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்கள் இந்த சட்ட போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 137 )

C.SRIRAM
ஜூன் 13, 2025 15:40

நீதி நிர்வாகம் . மொத்தமாக இந்த அமைப்பை மாற்றி செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்வு காணலாம் .


Sivasankaran Kannan
ஜூன் 09, 2025 15:30

இந்த மகா பிரபுக்கள் இன்னும் காங்கிரஸ் கால விசுவாசத்தை விடவில்லை.. நீதி துறையை மிக மிக சீரமைக்க 1000 வேலைகள் உள்ளன.. அதில் இவர்களை தொழில் நுட்ப முயற்சிகளை செய்து பொது மக்களின் நலனுக்கு கேள்விகள் கேட்கலாம்.. திராவிட மொடேல்ஸ் போடும் சட்ட சிக்கல்களை குப்பையில் போட்டு நாட்டுக்கு நன்மை செய்யும் விஷயங்களில் மகா பிரபுக்கள் என்னை போன்ற சாதாரண காமன் மானுக்கு நல்லது செய்ய கடவுளை வேண்டுகிறேன் யுவர் லார்ட் ..


Louis Mohan
மே 26, 2025 17:48

கேள்விகளுக்கு பதில் சொல்ல உச்ச நீதி மன்றத்திற்கும் கால நிர்ணயம் செய்ய இயலாது என்று நினைக்கிறன்..


C.SRIRAM
மே 22, 2025 22:41

இதுக்கு ஒரு கால கெடு நிர்ணயித்து ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படுமா ?. நீதித்துறையின் செயல்பாடும் சரியில்லை . நேர்மைத்தன்மையும் சந்தேகத்துக்குரியதாகிவிட்டது . நீதித்துறையின் அத்துமீறல்கள் மிக அதிகம் .


M Ramachandran
மே 22, 2025 00:18

சமீப கால நீதி மன்ற தீர்ப்புகள் சர்ச்சை குடையதாக வேர் இருக்கிறது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. முறையாக ஆராயமல் அவசர கதியில் யாரையூர் திருப்தி படுத்தும் நோக்கில் இருக்குமோ என்று தோன்றுகிறது. அவசர கதியில் கொடுக்க பட்ட தீர்ப்பாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது


Lakshmanan Kasi
ஜூன் 04, 2025 11:38

உச்ச நீதி மன்ற சிஎப் ஜஸ்டிஸ் சட்டம் theriatha


K V Ramadoss
மே 16, 2025 19:59

15-வது கேள்வியாக இதனை சேர்த்துக்கொள்ளலாம் : ஜனாதிபதி தன் வரம்புக்குட்பட்ட உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருப்பதை, ஒரு மாநில முதன்மந்திரி அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கண்டிக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா ? நாட்டு ஜனாதிபதியை தவறாக விமர்சிக்கும் ஒரு முதன் மந்திரியின் மேல், ஜனாதிபதியோ அல்லது நீதிமன்றமோ என்ன தண்டனை விதிக்கலாம் ?


Kasimani Baskaran
மே 16, 2025 03:40

மிக எளிது. சாதாரண சட்டத்தில் சந்தேகம் வந்தாலேயே ஐந்து பேர் கொண்ட பெஞ்ச் முடிவு எடுக்க வேண்டும். இது ஜனாதிபதி மற்றும் அவரது பிரதிநிதியான கவர்னரின் அதிகாரம் பற்றியது. ஆகவே ஐந்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீதிபதிகள் அமர்ந்து பரிசீலிக்க வேண்டும். ஆனால் இங்கு நடந்தது காமடி - இரண்டு நீதிபதிகள் மட்டுமே. ஆகவே அவர்கள் மீது ஜனாதிபதி ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்க முடியும். ஞாயமான நீதிபதிகளாக இருந்தால் உடனே பாராளுமன்றத்துக்கு பரிந்துரைத்து ஒரு அதிக பட்ச காலம் என்பதை நிர்ணயித்து சட்டம் இயற்றச்சொல்லி இருப்பார்கள்.


S.kausalya
மே 16, 2025 00:52

நம் முதல் மந்திரி எல்லாம் அறிந்தவர் போல பதிவு இடுகிறார். ஜனாதிபதி கேட்டது என்ன ? உச்ச நீதி மன்றத்திற்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதி க்கு உத்தரவு இடும் அதிகாரம் அரசியல் சாசனத்தில் உள்ளதா? கால நிர்ணயம் பற்றி சொல்ல பட்டு இருக்கிறதா? உச்ச நீதிமன்றம் அதற்கு பதில் சொல்ல போகிறது. இவர் ஏன் பொங்கி மாய்கிறார்? இவ ரின் அரசு ,, அண்ணா நகர் சிறுமி வழக்குக்கு உச்ச நீதிமன்றம் சொல்லலாம். மறுபரிசீலனை செய்ய சொல்லலாம். ஆனால் ஜனாதிபதி தன் அதிகாரம் பற்றிய சர்ச்சைக்கு கேள்வி கேட்க கூடாதா


Minimole P C
மே 28, 2025 08:05

well said.


Sri Sri
மே 15, 2025 21:51

மாநில முதல்வர் மட்டும் தான். வானளாவிய அதிகாரம் கொண்ட மன்னர் கிடையாது. ஜனாதிபதி தான் உச்ச அதிகாரம். ஜனாதிபதியை கேள்வி கேட்க உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது. ஜனாதிபதிக்கு மாநில முதல்வர் கண்டனம் என்பது கேலிக்கூத்து.


Minimole P C
மே 28, 2025 08:11

Stalin gave money etc to voters and got elected. But he critizes our president. Is it so called "Kalikalam".


SIVA
மே 15, 2025 21:47

தனி ஒரு நபரின் சமாதிக்காக இரவோடு இரவாக வழக்கை விசாரித்தது ஏன் அதையும் வரிசைப்படி விசாரிக்கலாமே , ஐம்பது ஆண்டுகளில் தண்டிக்கப்பட்ட அரசியல் வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம் , 2ஜி கேசில் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று ஒரு பத்திரிகையில் வழக்கு விசாரணை ஆரம்பத்தில் எப்படி சொல்லபட்டது , ஒரு குற்றவாளியுடன் மாநில அமைச்சர் , துணை மேயர் பிரியாணி சாப்பிடுகின்றார்கள் ,அந்த வழக்கு எப்படி பதியபடகூடாதோ அப்படி தவறாக பதியப்பட்டது என்று கூறிய நீதி மன்றம் அந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற வில்லை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை