மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
41 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
புதுடில்லி: இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று புறப்பட்டு சென்றார். தென்கொரிய பயணத்திற்கு பின்னர் அடுத்தக்கட்ட பயணத்தை துவங்கியிருக்கிறார் இவர் .
சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியாவில் 8 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அந் நாட்டு பாங்குகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க கோருவது உள்பட இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் மீராகுமார், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேசினர். ஜனாதிபதியுடன் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ்சுக்லா, மற்றும் எம்.பி..க்கள் , 45-க்கும் மேற்பட்ட வர்த்தக பிரதிநிதிகள் செல்கின்றனர்.
4ம் தேதி வரை சுவிட்சர்லாந்திலும், பின்னர்4ம் தேதி இரவு முதல் 7ம் தேதி வரை ஆஸ்திரியாவிலும் இருப்பார். தற்போது நாட்டில் கறுப்பு பணம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஜனாதிபதியின் சுவிஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இருநாடுகள் இடையில் இந்தியர்களின் பணபரிமாற்றம் மற்றும் டெபாசிட் விவரங்கள் அறிவது தொடர்பில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
41 minutes ago
6 hour(s) ago | 5