ஊழியர்களுக்கு அழுத்தம்!
அதிகரித்து வரும் வேலையின்மை, அரசின் மோசமான கொள்கைகள், அதிக வரிவிதிப்பு ஆகியவற்றால், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பெரும் அழுத்தம் தருகின்றன. இதனால் சமச்சீர் வேலை - வாழ்க்கை சூழல் பாதிக்கப்படுகிறது. பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதிஉள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள்!
'ஒரே நாடு - ஒரே தேர்தல்' இருக்கட்டும், மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி பதவிகள் காலியாகி நான்கு ஆண்டுகள் ஆகப்போகிறது. உள்ளாட்சி நிர்வாகம் நேரடியாக பொது மக்களுடன் தொடர்புடையது. தேர்தல் முக்கியம் என்று கருதினால் இந்த தேர்தலை முதலில் நடத்துங்கள்.ராஜ் தாக்கரே, தலைவர், நவநிர்மான் சேனாநிதீஷ் தோற்றுவிட்டார்!
பீஹாரில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் முதல்வர் நிதீஷ் குமார் தோற்றுவிட்டார். நவாடா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக, 21 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்.லாலு பிரசாத் யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்