உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி; எனது அதிர்ஷ்டம் என பெருமிதம்!

போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி; எனது அதிர்ஷ்டம் என பெருமிதம்!

பனாஜி: விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அவர் இந்திய கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது எனது பாக்கியம் என தெரிவித்தார்.கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில், கடற்படை வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடி மகிழ்ந்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது எனது பாக்கியம். எனது ஒருபுறம் கடலும், மறுபுறம் இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் பலமும் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pxqox7qr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்திய கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது தனது அதிர்ஷ்டம். இந்த தருணம் மறக்கமுடியாதது. இந்த காட்சி நம்பமுடியாதது. இந்தியா மீதான நமது வீரர்களின் நேசம் தான், நமது கப்பல்கள் விமானங்களின் பலம். கடல் நீரில் சூரியனின் கதிர்களின் பிரகாசம், துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளைப் போன்றது.

பாராட்டுக்கள்

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். கடற்படை, விமானப்படை கூட்டு முயற்சி தான்பாகிஸ்தானை விரைவாக சரணடையச் செய்தது. ஐஎன்எஸ் விக்ராந்தில் நேற்று கழித்த இரவை வார்த்தைகளில் விவரிக்க கடினமாக உள்ளது. நீங்கள் அனைவரும் எவ்வளவு அபரிமிதமான ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்பியிருந்தீர்கள் என்பதை நான் கண்டேன்.

தேசபக்தி

நேற்று நீங்கள் தேசபக்தி பாடல்களைப் பாடுவதையும், உங்கள் பாடல்களில் ஆப்பரேஷன் சிந்தூரை விவரித்த விதத்தையும் பார்த்தபோது, ​​ஒரு ஜவான் போர்க்களத்தில் நிற்கும்போது உணரும் அனுபவத்தை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கடந்த காலங்கள்...!

கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.2025- விக்ராந்த் போர்க்கப்பல், கோவா.2024- சர் கிரீக், குஜராத்.2023- லெப்சா, ஹிமாச்சலப் பிரதேசம்.2022- கார்கில் போர் நினைவிடம்2021- நௌஷெரா, ஜம்மு காஷ்மீர்.2020- லோங்கேவாலா, ராஜஸ்தான்.2019- ரஜோரி, ஜம்மு காஷ்மீர்.2018- ஹர்சிலில் உள்ள இந்தோ திபெத் படை, உத்தராகண்ட் 2017- குரேஸ் பிரிவு, ஜம்மு காஷ்மீர்.2016- சும்டோ (இந்திய-சீன எல்லை), ஹிமாச்சலப் பிரதேசம்.2015- அமிர்தசரசில் உள்ள தோக்ராய் போர் நினைவிடம், பஞ்சாப்.2014- லடாக்கின் சியாச்சினில் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMESH KUMAR R V
அக் 20, 2025 17:34

இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம் மோடி ஜி.


V Venkatachalam
அக் 20, 2025 17:32

எங்க டமில் நாட்டிலே எங்க முதல்வரு தீபாவளி கொண்டாட மாட்டார். அவருக்கும் இது மாதிரி பண்ணணும்ன்னு தோணுது. சமூக நீதி சம நீதி செம நீதி தொந்தரவு ன்னு மாட்டி கிட்டு முழிக்குறதால தீபாவளியை கொண்டாடவே முடியல. மத்த படி இந்துக்களின் தோழன் நான் மட்டுந்தான். மோடிக்கு இந்த மாதிரி குறுகலாக்கப்பட்ட நிர்ப்பந்தம் இல்லை. அவராவது கொண்டாடப்படும். ஹூம்...


VENKATASUBRAMANIAN
அக் 20, 2025 14:02

சில தமிழர்களின் வயிறு எரிகிறது. இது திராவிட கும்பல் புனைப்பெயரில் 200 தந்து கூவும் உபீஸ்கள்


RAJ
அக் 20, 2025 13:40

மாமனிதர் மோடிஜி... வாழ்க...


திகழ்ஓவியன்
அக் 20, 2025 12:36

COSTUME DESIGNER பாவம் வெந்து போய் இருக்குப்பார் , மிகவும் எளிமையா தீபாவளி கொண்டாடிய பிரதமர்


N Sasikumar Yadhav
அக் 20, 2025 14:07

உங்க கோபாலபுர திராவிட எஜமானை ஒருமுறையாவது இதுபோல உங்க கோபாலபுர திராவிட எஜமானின் கீழ் பணிபுரியும் காவல்துறையினருடன் போய் தீபாவளி கொண்டாட சொல்லுங்க


vivek
அக் 20, 2025 14:55

டாஸ்மாக் அடிமை


Kudandhaiyaar
அக் 20, 2025 15:06

பணம் கொடுத்த உங்கள் வருத்தம் தெரிகிறது. மறுபுறம் வயிற்றெரிச்சல் தெளிவாய் புரிகிறது


Varadarajan Nagarajan
அக் 20, 2025 19:09

வெளிநாட்டில் வசிக்கும் பொழுது நமது நாடு இந்தியா, நமது மாநிலம் தமிழ்நாடு, நமது ஊர் போன்ற எண்ணங்களோடு நமது நாடு மேலும் முன்னேறவேண்டும் என்ற நல்ல நேர்மறையான எண்ணங்கள் பொதுவாக தோன்றும். ஆனால் விதிவிலக்காக இவர்மட்டும் இன்னும் 200 ரூபாய்க்கு கூவிக்கொண்டுள்ளார். அதிலும் உண்மையான பெயரைக்கூட வெளியில் சொல்லமுடியாமல்.


முதல் தமிழன்
அக் 20, 2025 12:26

மக்களுக்கு துரதிஷ்டம் வரி குறைப்பு கண் துடைப்பு


Sri
அக் 20, 2025 13:47

ask Mr Tamilnadu finance minister to reduce the tax increase he made on Property, EB


N Sasikumar Yadhav
அக் 20, 2025 14:05

உனக்கு ஓஷி இலவசம் உங்க கோபாலபுர திராவிட எஜமான் கொடுப்பார் போய் வாங்கி கொள்ளுங்க


vivek
அக் 20, 2025 14:56

முதல் டாஸ்மாக் தமிழன்...தமிழ்நாடு


சமீபத்திய செய்தி